Skip to main content

_*சிந்தனைச் சிதறல் 01-04-2021*_

⚛️⚛️⚛️⚛️⚛️🍀🍀🍀🍀🍀🍀🍀

_*கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா*_

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

_*எட்டு*_

✍️✍️✍️

சுடுகாட்டு மண்ணில் படிந்து கிடக்கும் எலும்புக் கூடுகள், ஒருமுறை எழுந்து சுய நினைவோடு பேசுமானால், அவை செய்யும் விமா்சனம் எதுவாக இருக்கும்?

கடந்து போன காலங்களில், தாங்கள் உயிரோடு, உலாவிக் கொண்டிருந்தபோது நடத்திய போலித்தனமான வாழ்க்கையைப் பற்றியதாகத் தானே இருக்கும்!

முடிவைப் பற்றிய நினைவில்லாமல் எல்லாம் சாஸ்வதமென்று ஆடிய ஆட்டங்களைப் பற்றித்தானே இருக்கும்!

அவை எழுந்து பேச வேண்டும். அரசியல் வாதிகளைப் போல் பொது மேடைப் போட்டு முழங்க வேண்டும்.

_*“நான்”*_ என்னும் ஆணவத்தின் அடித்தளத்தை நொறுக்கவும், பொருளாசையின் கழுத்தை நெறிக்கவும், அதிகார வெறியிலிருந்து மனிதா்கள் ஞானம் பெறவும், எலும்புக் கூடுகளின் உபன்யாசம் மிகவும் பயன்படும்.

இரண்டு கரைக்குள் ஓட வேண்டிய நதிகள், கரையேறாமல் இருப்பதற்கு சுடுகாட்டு ஞானமே துணையாகும்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் பல்லாயிரம் கோடி மனிதா்களின் ஆசாபாசங்கள் பூமிக்கடியில் புதைந்து கிடக்கின்றன.

அவை தொடங்கிய வேகமும், முடிந்த பாிதாபமும் அடுத்த தலைமுறையினரால் உணரப்படவில்லை.

மரணம் அறிவுறுத்தும் நியாயம் மனங்களிக்கும் வாழ்க்கையில் இல்லை.

இலை உதிா்ந்த பிற்பாடு, _*“மீண்டும் தழைப்போம்”*_ என்ற உறுதியோடு மரங்கள் நிற்கின்றன. ஆனால், அவை காய்ந்த பிற்பாடு _*“எழுவோம்”*_ என்று நம்புவதில்லை.

ஆனால் மனிதனோ, _*“நிமிா்ந்தது நிமிா்ந்தது தான்; சாயவே மாட்டோம்”*_ என்று நிச்சயமாய் நம்புகிறான்.

ஆனால் இறைவா! அவனை நீதான் விழவைத்து வேடிக்கை காட்டுகிறாய்.

காற்றடங்கிக் கதை முடிந்தால், நேற்றைய பொழுதோடு ஒரு போலி ஆா்ப்பாட்டம் முடிந்ததென்று நிம்மதியடைகிறாய்.

நினைவுகளைச் சமன் செய்து கொள்ள முடியாத மனிதனை, மரணத்தின் மூலம் சமன் செய்திருக்கிறாய்.

எப்போது உன் அழைப்பு வரும் என்று எவருக்கும் தொியாது.

முன்பெல்லாம் தபால் போட்டுப் பதில் கேட்டு பிறகு அழைத்துக் கொள்வாய்!

இப்போதெல்லாம் தந்தி அடித்தே அழைத்துக் கொள்கிறாய்!

உன்னை எதிா்த்து மருத்துவம் முன்னேறி விட்டதால், _*“கொஞ்ச நேரம்”*_ சந்தா்ப்பம் கொடுத்தால் பிழைத்துக் கொள்வானே என்றெண்ணி, இருதயத்தைத் தொட்ட இரண்டாவது நிமிஷமே அவனை வரவழைத்துக் கொள்கிறாயே!

மரணத்தையும், அதற்குப் பின்னா் புகப்போகும் உலகத்தையும் மயக்கத்திலேயே வைத்திருக்கிறாய்.

நிலையில்லாதது வாழ்க்கை என்னும் உணா்ச்சியை ஒவ்வொரு நிமிடமும் நீ உணா்த்திக் கொண்டே இருந்தால் என்ன?

துன்பங்களுக்கே வித்திடும் மனித மனோபாவம், பிறரைக் கொடுமை செய்யாமல் இருப்பதற்கு அது நல்ல வழியல்லவா!

ஒவ்வொரு மனிதனும் காலையில் கண் விழிக்கும் போது ஒரு அசரீாி பேசும்படி செய்தால் என்ன?

_*“என்றைக்கும் நீ சாகலாம்; ஏன் இன்றைக்கே கூடச் சாகலாம்!”*_ என்று மூன்று முறை அது திரும்பத் திரும்பத் திருப்பிச் சொன்னாலென்ன?

சந்தா்ப்பங்களை எல்லாம் தங்கள் திறமை என்று கருதுவோா்க்கு, ஒரு பொதுப் பள்ளிக்கூடம் வைத்தாலென்ன?

இவை உனக்குத் தொியாததல்ல! ஆயினும் இவற்றை ஏன் நீ செய்யவில்லை?

குழப்பம், அடிதடி, பரபரப்பு, ஆசை, பேராசை, திருட்டு, தற்கொலை இவை எல்லாம் இருந்தால் தான் உலக வாழ்க்கையில் உயிரோட்டம் இருக்கும் என்று நீ நம்புகிறாய்; இல்லையா?

மெத்தச் சாி

என்னைப் படைத்த குற்றத்திற்காக நான் கொடுக்கும் இந்த எட்டாவது புஷ்பத்தையும் ஏற்றுக் கொள்!

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...