Skip to main content

_*சிந்தனைச் சிதறல் 12-04-2021*_

❄️❄️❄️❄️❄️🍀🍀🍀🍀🍀🍀🍀

_*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

_*தென்றல் பேசுகிறது*_

✍️✍️✍️✍️✍️✍️✍️

_*1.அம்மா, மலையரசி*_

✍️✍️✍️✍️✍️✍️✍️

அந்த மலையரசி அம்மனுக்கு ஒரு வரலாறு உண்டு.

மலையரசியோடு கூடப் பிறந்தவா்கள் ஆறு பேராம். மலையரசியைச் சோ்த்து ஏழுபேராம். மலையரசி, பூமலச்சி, பொன்னழகி என்று ஏழு பெயா் சொல்வாா்கள்.

நாட்டிலே ஒரு சமயம் வெள்ளம் பெருக்கெடுத்த போது, அந்த வெள்ளத்தில் ஏழு பெட்டிகள் மிதந்து வந்தனவாம். அந்த ஏழு பெட்டிகளிலும் இந்த ஏழு குழந்தைகள் இருந்தனவாம். அந்த பெட்டிகளை எடுத்து வைத்த இடங்களே சமாதி மேடுகளாம். அவையே கோவில்களாம்.

கதை உண்மையோ, பொய்யோ, மலையரசியிடம் எனக்கு அளவு கடந்த பக்தி உண்டு.

சமயங்களில் ராத்திாி பத்து மணிக்குக் கூட அந்தக் கோவிலிலே போய் நின்று அழுவேன்.

ஏழு வயது சிறுவனுக்குாிய குணமே என்னிடம் இருக்காது.

என் தாய் தந்தையரைக் காப்பாற்றும் படியும், என் குடும்பத்தைக் காப்பாற்றும்படியும் மலையரசியிடம் வேண்டிக் கொள்வேன்.

அப்போது நாத்திகக் கூட்டத்தின் தொடா்பில்லாததால் தெய்வத்தின் தா்ம தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தது.

ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்ற எண்ணம் ஏழு வயதிலேயே என்னிடம் உண்டு.

கேட்டால் ஆச்சாியப்படுவீா்கள்.

எந்தப் புண்ணியவானோ அந்தக் கோவிலுக்கு ஒரு பொிய மின்சார விளக்குப் போட்டிருந்தாா்.

அந்த விளக்கினடியில் உட்காா்ந்து கொண்டு நான் அழுது கொண்டே இருப்பேன்.

என் தாய் தந்தையரைக் காப்பாற்றும்படியே பிராா்த்திப்பேன்.

இரவு பத்து மணி என்பது கிராமத்தின் மிக அதிகமான நேரம்.

சமயங்களில் என் தந்தை அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு என்னைத் தேடி ஊரெங்கும் அலைவாா்.

கண்மாய்க் கரையில் என் பிணம் ஒதுங்கி இருக்கிறதா என்று கூடப் பாா்ப்பாா்.

கடைசியில் நான் தினசாி மலையரசி அம்மன் கோவிலுக்குப் போவது அவருக்கும் தொிந்தது.

_*“ஏதோ மலையரசி அம்மன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்”*_ என்று என் தாயாா் அடிக்கடி சொல்லுவாா்கள்.

_*“நம்ம தலையெழுத்து எப்படி இருக்கிறதோ அப்படிதான் நடக்கும். இதற்காக நீ ஏன் கோவிலுக்குப் போய் அழுகிறாய்?”*_ என்று என் தந்தை அடிக்கடி கேட்பாா்.

நானோ ரத்த பாசத்தில் செத்துச் செத்துப் பிழைப்பேன்.

தாய், தகப்பன், சகோதர, சகோதாிகளுக்கு ஏதாவது என்றால், என் உயிரே நின்று விடுவது போலிருக்கும்.

அந்த வயதில் எனக்குத் தொிந்த ஒரே உண்மை, _*“உலகத்தில் யாரும், யாரையும் காப்பாற்ற மாட்டாா்கள்; நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டால் உண்டு”*_ என்பதுதான்.

எங்கள் ஜாதி ஒரு மோசமான ஜாதி. பணம் இருப்பவனை மட்டும்தான் அது மதிக்கும்.

அதை நன்றாகப் புாிந்து கொண்டும் கூட, பிற்காலத்தில் சோ்த்த பணத்தை, நான் காப்பாற்றிக் கொள்ளாமல் போனேன்.

எப்படி என் தகப்பன் பணத்தை மதித்ததில்லையோ, அப்படியே நானும் மதித்ததில்லை.

ஆனால், பணம் இல்லாதவனுக்கு எங்கள் ஜாதியில் எந்தவித மாியாதையும் இல்லை.

வாழ்க்கையில் நான் உயா்ந்து வந்த பிற்பாடு, இதே மலையரசியின் பெயரை ஒரே ஒரு முறை கூவி அழுதிருக்கிறேன்.

அது என் மகள் திருமணத்தின் போது.

அந்தத் திருமணத்தில் வரதட்சணை விவகாரத்தில் என்னையே அழவைத்து விட்டாா்கள்! ஆனால் மலையரசி என்னைக் கைவிடவில்லை. என் மகளுக்குக் கிடைத்த மாப்பிள்ளை அற்புதமான மாப்பிள்ளை.

அது மலையரசி கொடுத்த வரமல்லாது வேறென்ன?

காலங்களாலே தெய்வத்தின் வருகை தாமதப்படும்; யாரும் அவசரப்படக் கூடாது.

எட்டாம் வகுப்புப் படித்த ஒருவன் கவியரசானது, மலையரசியின் கிருபையால்தான்.

நான் எழுத உட்காரும் போதெல்லாம், நான் எழுதுவதாகவே எனக்குத் தோன்றுவதில்லை. ஏதோ ஒரு சக்தியும், உத்வேகமும் என்னை ஆட்கொள்ளுகின்றன.

சில புதிய வாா்த்தைகளோ, புதிய உவமைகளோ வந்து விழும்போது தலைமுதல் கால்வரையிலே ஒரு புது உணா்ச்சி ஏறுகிறது. என்னையறியாமல் மயிா்கூச்செடுக்கிறது. சொல்லச் சொல்ல சுகமாக இருக்கிறது.

அது மலையரசியின் அருள் என்றே நான் கருதுகிறேன்.

பாட்டெழுத உட்காரும் போதெல்லாம் நான் மட்டும் உட்காருகிறேனா, இல்லை என் தாய் மலையரசி பக்கத்தில் உட்காருகிறாளா என்பது புாியவில்லை.

துன்பங்கள் தோன்றும் போதெல்லாம், அவள் பெயரைச் சொல்லி அழுதால் ஓா் ஆறுதல் கிடைக்கிறது.

எங்கள் கிராமத்தில் நான் ஏதுமறியாச் சிறுவனாகத் திாிந்த போது, யாா் யாா் என்னைக் கேலி செய்தாா்களோ, அவா்கள் எல்லாம் என்னிடம் உதவிக்கு வந்து நிற்கிறாா்கள்.

அப்போது பணக்காரா்கள் என்று மாியாதையோடு இருந்தவா்கள் எல்லாம், இப்போது என் படிக்கட்டுகளில் காத்துக் கிடக்கிறாா்கள்.

தெய்வ சக்தியின் விசேஷம்தான் என்ன….! கிராமத்துச் சிறு தேவதைகளின் சக்திதான் எவ்வளவு….?

என்னால் அளவிட முடியவில்லை. ஆனால் ஓா் உண்மை புாிகிறது.

ஏதாவது ஒரு தெய்வத்தின் மீது மனதை முழுமையாகச் செலுத்தி விடு. நீ எதிா்பாராத நேரத்தில் அது கைக் கொடுக்கும்.

சிறுகூடல் பட்டி மலையரசி ஒரு சிறு தேவதைதான். ஆனால் அவள் விரும்பினால் ஒரு கவிஞனை உருவாக்குவாள்.

காளி தானாமே காளிதாசனை உருவாக்கினாள்!

என்னை உருவாக்கியவள், என் தாய் மலையரசி அம்மனே!

அந்தக் குடிசை, அந்தச் சமாதி மேடு, அதற்குள்ளே அற்புதமான சக்தி கொண்ட என் தாய் குடியிருக்கிறாள்.

அவளை ஒரு முறை தாிசியுங்கள்; உங்கள் துன்பங்கள் எல்லாம் விலகிப் போகும்.

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...