Skip to main content

ஒதுக்கப்பட்ட ஊருக்குள் பேருந்து

இறக்கிவிட்டதும்

எங்களுக்குள்

ஏறிக் கொண்டது

தேர்தல் பணி..

Zonal offficer

கொடுத்துப் போன

கோணிமூட்டையை

கொட்டியதும்

கொத்து கொத்தாய்

வந்து விழுந்தன

ஃபாரங்கள்..

EVM எந்திரங்களை

பிறந்த குழந்தை

போல பாதுகாத்தோம்..

சின்ன

வகுப்பறை

ஒரே ட்யூப்லைட்..

ஓரமாய் ஓடும்

மின்விசிறி..

இப்படி கொடுத்ததற்குள்

வாழ கற்றுக் கொடுத்தது

தேர்தல் பணி..

குழாய்

இருந்தது

தண்ணீர் இல்லை..

பாத்ரூம்

கதவு உடைந்திருந்தது..

சில இடங்களில்

பாத்ரூமே

இல்லை என்று கேள்விபட்ட போது மனம் தானாக

ஆறுதலடைந்தது..

புரண்டு புரண்டு படுத்தும்

இமைகளில்

தூக்கம்

அமரவில்லை..

பக்கத்தில் P3

படுத்ததும்

தூக்கம் அவரை வாரி

அணைத்துக் கொண்டது..

P1 ‘குபீர் குபீர்’

என்று

எழுந்து மீண்டும்

படுத்துக் கொண்டார்..

வந்த

தண்ணீரை

நெய் போல

ஊற்றி குளித்து

ஐந்து மணிக்கே

தயாரானோம்..

ஆறுமணிக்கு

வந்த

ஏஜெண்டுகள்..

அவர்கள் கூட

வந்த

குளிக்காத

ஆட்கள் என்று

Mockpoll

தொடங்கியது..

ஆயிரம்

முறை வீடியோ

பார்த்தாலும்

அங்கு ஒருமுறை

சீல் வைப்பதில்

தடுமாறி

சரிசெய்து தொடங்கியது உண்மை

வாக்குப்பதிவு..

ஏழு மணிக்கு

துவங்கிய

வரிசை

ரயில் பெட்டி

போல நீண்டது..

அடிக்கடி

Total வுடன்

17A

ஒப்பிட்டு

ஒரே எண்ணிக்கை வர

குலதெய்வத்தை

கும்பிட்டேன்..

இட்லி

வந்து

வயிற்றில்

ஓட்டுப் போட மணி

பத்து ஆனது..

நடுவே ஒரு

தேநீரில்

தலைவலிக்கு

ஒத்தடம் கொடுத்தேன்..

மதிய உணவை

மறக்கும் அளவுக்கு

வாக்குப்பதிவு கூட்டம்..

கையுறை

சானிடைசர்

முகக்கவசம்

எல்லாம் மறைமுக

வேட்பாளாரான

கொரோனாவின்

சின்னங்கள்..

ஆறு மணிக்கு

மேல்

அடங்கத் தொடங்கியது

வெளிச்சமும்

கூட்டமும்..

ஒரு வழியாக

ஏழு மணிக்கு

Close அழுத்தியதும்

நிம்மதி Open ஆனது..

சீல் வைத்து

முடித்ததும்

ஓரிருவரை தவிர

காற்றாய்

பறந்தனர் ஏஜென்டுகள்..

Po டைரி

17C

Declaration form

எல்லாம்

முடித்து நிமிர்ந்த போது

முட்கள் ஒன்பதை

முத்தமிட்டிருந்தது..

P1 P2 P3

‘ஒருநாள் குடும்பம்’

போல

பழகியதால்

எங்கள் ஒற்றுமையின்

இசையில்

சின்ன சின்ன

சலசலப்புகள்

காணாமல் போனது..

இரவு உணவுக்கு

பதில் தந்த

வாழைப்பழதத்தில்

பசி வழுக்கி

விழுந்தது

வயிற்றுக்குள்..

பத்து மணிக்கு

மேல்

பறந்து வந்த

Zonal

மொத்தத்தையும்

கொத்திக் கொண்டு

மீண்டும் பறந்தார்..

12 மணிக்கு

மேல்

துரத்திய நாய்களை தாண்டி வீடுவந்த போது

நாட்டுப்பணி ஆற்றிய

ஒரு ராணுவ வீரனின்

கம்பீரம் எனக்குள்..

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...