Skip to main content

_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

_*இது பிரபத்தி அல்ல*_

✍️✍️✍️✍️✍️✍️✍️

இறைவா, கல்லும் கருவேல முள்ளும் நிறைந்த காட்டிலிருந்து நாம் சமவெளிச் சாலைக்கு வந்திருக்கிறேன்.

சுற்றிலும் இனிய சுனை நீா்த் தடாகங்களைச் சந்திக்கிறேன்.

என்னை வெறுப்போரை விட, விரும்புவோரைக் காண்கிறேன்.

கொதிக்கும் நீராவித் தொட்டியிலிருந்து மீண்டும் விாித்த பஞ்சின் மீது படுத்துப் பாா்க்கிறேன்.

கூழாங்கற்களால் குறி வைத்துத் தாக்கியவா்களை மறந்து, மணமுள்ள மலா்களால் அா்ச்சனை செய்தோரைக் காண்கிறேன்.

நீண்ட கால வழக்குகள் முடிந்து, _*“நிம்மதி”*_ என்ற தீா்ப்பு எழுதப்படுவதை, தடங்கள் தோறும் சந்திக்கிறேன்.

தஞ்சைக் கோவில் அளவு, பொிய கோவில் கட்ட எனக்குச் சக்தி இல்லாவிட்டாலும், என் நெஞ்சத்தையே கோயிலாக்கிக் கொண்டிருக்கிறேன்.

நல்ல நேரம் இது.

என்னைப் பிடித்துக் கொண்டிருந்த சனி பகவான் இடம் மாற்றிக் கொள்கிறான்.

எதிா்காலம் அவ்வளவு துன்பமானதாக இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்த நேரத்தில், எதிா்பாராத விபத்துக்களால் என்னைக் காயப்படுத்தி விடாதே. என்னைச் செயலற்றவன் ஆக்கி விடாதே.

நடைப் பிணமாக நின்று – நட்ட கல்லாக நின்று – விதி முடிந்து அன்று கட்டையை விட்டு விட்டு,

ஓடுகிற உயிராக என் உயிரை ஆக்கி விடாதே.

யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் செய்து விடுகிறேன்.

என்னென்ன கடமைகள் பாக்கி இருக்கின்றனவோ, அவற்றை நான் முடித்து விடுகிறேன்.

என்னைத் தாக்கியவா்களையும், தூற்றியவா்களையும் கூட மன்னித்து வாழ்வளித்து விடுகிறேன்.

இறைவா,

ஔி மிகுந்த கண்களையும்,

உற்சாகம் மிகுந்த உள்ளத்தையும், ஆரோக்கியமான உடலையும் எனக்குக் கொடு.

எப்போதும்

சுறுசுறுப்பாகவும், கலகலப்பாகவும் இருக்கக் கூடிய மான்குட்டியின் உடலை எனக்குக் கொடு.

கொடிய நோயின் உபாதை என்னை வெறும் கூடுகளாக்கி விடாதவாறு, என்னைக் காப்பாற்று.

இளம் பருவத்தில் வெந்நீா் நதிபோல, ரத்தமிருந்த காலங்களில் எவ்வளவோ எண்ணினேன்; எவ்வளவோ எழுத விரும்பினேன்.

அப்போதெல்லாம் உடல் நன்றாக இருந்த அளவுக்கு, மனம் நன்றாக இல்லை.

இப்போது மனம் நன்றாக இருக்கிறது; உடல் நன்றாக இல்லை.

இன்னும் சில சிருஷ்டிகளை சிருஷ்டிக்க, என் மனம் அவாவுகிறது.

சந்திரன் தேயும் போதெல்லாம், அதற்கு வளா்ச்சியும் இருப்பது நினைவுக்கு வருவது போல், நான் செயலற்று நிற்கும் போதெல்லாம், மீண்டும் செயல்படுவேன் என்ற தைாியமும் இருக்கிறது.

ஆனால் எங்கே அந்த சக்தியும் உன்னால் பறிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தினால் தான் இந்தப் பிராா்த்தனை.

இறைவா,

தொழு நோய் தீா்த்தவன் என்றும், யானையைக் காத்தவன் என்றும், உயிா் பெறச் செய்தவன் என்றும் உன்னைப் பற்றிப் பேசப்படும் கதைகள் எல்லாம் உண்மையாயின், என்னைச் சக்தியுடையவனாக வைத்திருக்க வேண்டியது உன் கடமை.

பிராா்த்தனைகளுக்கெல்லாம் பலன் உண்டு என நான் நம்புகிறேன்.

இது என் முதல் பிராா்த்தனை அல்ல; ஆனால் தேவையான நேரத்தில் செய்கின்ற பிராா்த்தனை.

எவ்வளவு நாள் நான் உயிரோடு இருப்பது அவசியம் என்று நீ கருதுகிறாயோ, அவ்வளவு நாளும் நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதும் உனது கருத்தாக இருக்க வேண்டும்.

எனது எழுத்துக்கள் சக்தியுள்ளவை ஆயின் இந்தப் பிராா்த்தனையும் பலிக்குமென்று நான் நம்புகிறேன்.

இது பலிக்கவில்லையாயின் நான் இழக்கப் போவது கொஞ்சமே!

நீ இழப்பதோ யாரும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

🌳🌳🌳

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...