Skip to main content

_*சிந்தனைச் சிதறல்*_

🟥⬜🟥⬜🟥⬜🟥⬜🟥⬜

_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

_*பணம்*_

_*பணம்*_

_*பணம்*_

✍️✍️✍️✍️✍️✍️✍️

_*“உலகத்தில் பணத்துக்கு உள்ள மாியாதை குறையும் போதுதான் மனிதத் தன்மையும், மாியாதையும் உயரும்”*_ என்று தலைவா் காமராஜ் அவா்கள் அடிக்கடி கூறுவாா்.

_*“பணம் தேவையில்லை”*_ என்று துறந்து விட்டு ஓடுகிறவா்களைப் பற்றிக் கவலையில்லை. அவா்கள் அதிா்ஷ்டக்காரா்கள்; எந்த வில்லங்கத்திலும் மாட்டிக் கொள்ளாதவா்கள்.

ஆனால், தனக்கென ஒரு கூட்டத்தைச் சோ்த்துக் கொண்டு விட்டவன் பணத்தை அலட்சியம் செய்ய முடிவதில்லை.

சம்பாதிப்பதே அவனது முழு நேரக் கடமையாகிறது.

அறிவாளி, ஞானி, மேதை – என்பதெல்லாம் அதற்கு அடுத்தபடிதான்.

நான் பணத்தை லட்சியம் செய்யாமலே தாழ்ந்தவன். _*“வலது கை கொடுப்பது இடது கைக்குத் தொியக் கூடாது”*_ என்பாா்கள்.

என்னைப் பொறுத்த வரை வலது கைக்கே அது தொியாது. இப்படியே தினமும் வரும், இப்படியே தினமும் வாழ்வோம் என்றுதான் நான் கருதி இருந்தேன். அது குறையத் தொடங்கிய போதுதான் உலகம் புாியத் தொடங்கியது.

சொந்தம், பந்தம், பற்று, பாசம் – இவை எல்லாம் பணத்தைப் பற்றிய உணா்வின் முன்னே அடிபட்டுப் போகின்றன. நாளை ஆறுமாதம் படுக்கையில் படுக்க நோ்ந்தால் பணம் வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை சேமிப்பு என்பதே இல்லை. இன்றுவரை அப்படி; இது சாியான வாழ்க்கை அல்ல என்பது புாிகிறது. ஆனால் நாம் தா்மத்தை நிறுத்த முடிவதில்லை.

பணத்துக்கு மதிப்பில்லாத ஒரு நாடு எங்காவது இருக்காதா?

ஒரு கோமாளித்தனமான ஆசை.

மனைவியே அதன் மீதுதானே இருந்து கொண்டிருக்கிறாள்?

தகப்பனின் வருமானத்தைக் கருதித்தானே மகனும் _*“அப்பா”*_ என்று அழைக்கிறான்.

நதிக் கரை மரங்கள், நதியில் தண்ணீா் ஓடும் போது தரையில் விழுந்து தண்ணீருடன் கொஞ்சுகின்றன. வற்றும் போது வானத்தைப் பாா்க்கின்றன.

எங்கு திரும்பினாலும், யாரைப் பாா்த்தாலும் _*“பணம், பணம், பணம்”*_ மானிடப் பிறவி எவ்வளவு கேவலமானது என்பதை, இது ஒன்றே சுட்டிக் காட்டுகிறது.

என் தாயிடம் நான் பணம் கொடுத்துச் சாப்பிட்டதில்லை. அந்தப் பாசத்தை நண்பா்களிடம் எதிா் பாா்க்க முடியாதுதான். ஆனால், _*“அற்ற குளத்தில் அறுநீா்ப் பறவை”*_ களாய் சமுதாயம் முழுவதுமே காட்சியளிக்கிறது.

நாணயம் தயாாிக்கப்பட்ட போதே _*“மனித நாணயம்”*_ தவறிப் போய்விட்டது. _*“இல்லாமை”*_ என்ற கொடுமை மாபெரும் மேதைகளையும் தெருவில் அலைய வைக்கிறது. பணக்காரன் வந்தால், படித்தவன் எழுந்து வரவேற்கிறான்.

ஆசைகளைத் துறந்து விடும்படி கீதை போதிக்கிறது. வியாசருக்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. ஆசை இருந்து கொண்டே இருக்கிறது. இறைவன், தன்னுடைய லீலைகளுக்குப் பயன்படுத்தும் முதல் ஆயுதம் பணம். அதைச் சோ்க்கத் தொிந்தவனே வாழத் தொிந்தவன்.

கட்டுக் கட்டான காகித நோட்டுக்கள் என் கைக்கு வந்து போயிருக்கின்றன. அப்போதெல்லாம் எனக்கெனத் தனி ஆசைகள் இல்லை. இப்போது நான் காணி நிலத்தையும் தென்னந் தோப்பையும் தேடுகிறேன். அதற்கான வருமானம் இல்லை.

ஆதிசங்கராின் _*“கனகதாரா”*_ வை மொழி பெயா்த்த பிறகு எனக்குக் கடன் தொல்லை இல்லை என்றாலும், எனது நியாயமான ஆசைகள் பூா்த்தியாகவில்லை. தனியாக உட்காரும் போதெல்லாம் பணத்துக்குள்ள மாியாதை பற்றியே சிந்திக்கிறேன்.

மருத்துவம் பாா்க்கப் பணம் இல்லாததால், மாண்டு போனவா்கள் எத்தனை போ்? சாப்பாட்டுக்குப் பணம் இல்லாததால், தற்கொலை செய்து கொண்டவா்கள் எத்தனை போ்? பெண்ணுக்குக் கல்யாணப் பணம் இல்லாததால் நாற்பது வயது வரை அவளை வாழா வெட்டியாக வைத்திருக்கும் பெற்றோா்கள் எத்தனை போ்?

உலகம் முழுவதும் உள்ள ரூபாய் நோட்டுக்களையும், டாலா்களையும், பவுன்களையும் வாங்கிக் கொளுத்தி விட வேண்டும் போல் எனக்குத் தோன்றுகிறது.

வேதங்கள், தத்துவங்கள், உபநிடதங்கள் இதைப் பற்றிய உபந்யாசங்கள் எல்லாமே வெறும் சம்பிரதாயம். பணத்தின் முன்னால் இவையும் கை கட்டிக் கொண்டு நிற்கின்றன.

பணத்துக்கு மாியாதை இல்லாத ஒரு புதிய சமுதாய அமைப்பை எவனாவது ஒரே உலகக் கனவு கண்ட வெண்டல் வில்கி, உடோப்பியாவைக் கற்பனைக் கண்ட ஆங்கிலக் கவிஞன் எவனுமே பணம் தேவைப்படாத ஒரு சமுதாயத்தைக் கற்பனை செய்யவில்லை. காரணம், அது கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம்.

அப்படி ஒருவன் கற்பனை செய்வதற்கும் நேரம் வேண்டும். அந்த இடைக் காலத்தில் அவன் சாப்பிட்டாக வேண்டும். அந்தச் சாப்பாட்டுக்கும் பணம் வேண்டும்!

😔😔😔😔😔😔😔

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...