Skip to main content

_*“ ஏன் எனக்கு மட்டும்…? ”*_

நமக்கு சோதனைகள் வந்தால், கஷ்டங்கள் வந்தால், துன்பங்கள் வந்தால் கடவுளிடம் நாம் கேட்பது *“ஏன் எனக்கு மட்டும் இப்படி செய்கிறாய்?”*

இந்தக் கேள்விக்கு ஒரு டென்னிஸ் வீரர் மிக அழகாக பதில் தந்திருக்கிறார்!

அந்த டென்னிஸ் வீரரின் பெயர் ஆர்தர் ஆஷ். அவர் விம்பிள்டன் வெற்றி பெற்றவர். 1983 ஆம் ஆண்டில் ஒரு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பொழுது ரத்தம் பெற்றுக்கொண்டதன் மூலமாக அவருக்கு *எய்ட்ஸ்* வந்தது. அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அப்பொழுது பலரும் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது; *“உங்களுக்கு கடவுள் ஏன் இப்படிச் செய்கிறார்?”*

இதை அடிப்படையாகக் கொண்டு அவர் செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையின் தலைப்பு;

*“WHY ME ?” – “ ஏன் எனக்கு மட்டும்? ”*

கட்டுரையில் அவர் எழுதியது பின்வருமாறு:

உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கும்பொழுது ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்?

குடிப் பழக்கம் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்?

சிகரெட் பிடிப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்?

பல பெண்களிடம் தொடர்பு உடையவர்கள் பலர் இருக்கும் பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு ஏன் எனக்கு எய்ட்ஸ் தந்தாய்? இப்படியாக நீண்டு கொண்டே போனது அந்தக் கட்டுரை. அதன் முடிவில் சொன்னார்;

‘இதனது தொடர்ச்சி அடுத்த வாரம்.’

இதைப் படித்த மக்கள் அனைவரும் மிகவும் வருந்தினார்கள். அவர் என்னதான் பதில் தரப்போகிறார் என்று காத்திருந்தார்கள்.

அடுத்த வாரம் WHY ME PART II ஏன் எனக்கு மட்டும் பாகம்-2 வெளிவந்தது.

அதில் அவர் எழுதியிருந்தார்;

உலகில் 500 லட்சம் பேர் டென்னிஸ் விளையாடத் *துவங்குகிறார்கள்.*

அதில் 50 லட்சம் பேர் தான் டென்னிஸ் *கற்றுக்* *கொள்கிறார்கள்.*

அதில் 5 லட்சம் பேர் தான் *தொழில்முறை* *டென்னிஸ்க்கு* வருகிறார்கள்.

அதில் 50,000 பேர் தான் *சர்க்யூட் லெவல் டென்னிஸ்* க்கு முன்னேறுகிறார்கள்.

அதில் 5000 பேர்தான் *கிராண்ட்ஸ்லாம்* லெவல் டென்னிஸ் க்கு முன்னேறுகிறார்கள்.

அதில் 50 பேர்தான் *விம்பிள்டன்* விளையாடுகிறார்கள்.

அதில் 4 பேர்தான் *அரையிறுதிக்கு* வருகிறார்கள்.

அதில் 2 பேர்தான் *இறுதிப்* போட்டிக்கு வருகிறார்கள்.

அதில் ஒருவர்தான் *வெற்றி* பெறுகிறார்!

அந்த வெற்றி பெற்ற ஒருவராக, அந்த *வெற்றிக்* *கோப்பையை* கையில் மகிழ்ச்சியோடு *தாங்குபவராக என்னைக் கடவுள் ஆக்கிய பொழுது நான் கேட்கவில்லை, “ஏன் எனக்கு மட்டும்?” என்று.*

வெற்றி மேல் வெற்றி தந்த பொழுது நான் கடவுளிடம் கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று. பேரும் புகழும் குவிந்தன. அப்போது கடவுளிடம் கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.

பணம் மழைபோல கொட்டியது. அப்பொழுது கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.

அப்போதெல்லாம் கேட்காத நான் இப்பொழுது கேட்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? நான் கேட்க மாட்டேன். கடவுள் இது வரை தந்ததை எப்படி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேனோ அது போல இதையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.

*இதுவரை எனக்காக வாழ்ந்த நான் இனி பிறருக்காக வாழப் போகிறேன்.* என்னுடைய பணம், புகழ், செல்வம், மீதமுள்ள வாழ்நாள் அனைத்தையும் இந்த நோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதற்கான மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிகளிலும் நான் செலவு செய்யப் போகிறேன். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். நன்றி.

என்று முடித்திருந்தார்.

இன்பம் வந்தபோது ஏனென்று கேட்காத நாம் துன்பம் வரும்போது மட்டும் ஏன் என்று கேட்பது எப்படி சரியாக இருக்க முடியும்?

*இன்பம், துன்பம் இரண்டையும் அவரே தருகிறார். இரண்டுமே நம் நன்மைக்குத்தான் என்று உணர்வோம். வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்போம்.

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...