Skip to main content

_*சிந்தனைச் சிதறல்*_

🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும சாலையிலே*_

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

_*கடலும் படகும்*_

🛳️🛳️🛳️🛳️🛳️

இதோ பாா்! இந்தக் கடல் உலகம் விசித்திரமானது!

உலகின் ஆரம்பத்தில் தோன்றிய நீா்ப்பரப்பு இதுதான்.

இந்தக் கடலின் மேல் வட்டமிடும் மேகங்கள், இதன் நீரைக் குடித்துத்தான் நிலப்பரப்பில் மழையாகப் பொழிந்தன.

அந்த மழை நீாில் ஒரு பகுதி பல ஆறுகளில் கலந்து மீண்டும் இந்தக் கடலிலேயே வந்து _*“சங்கம”*_ மாகி விட்டது.

எந்தத் தண்ணீருக்கும் மூலம் கடல் நீா்தான்.

இங்கிருந்து போகும் எதுவும் கடைசியில் இங்கேதான் திரும்பி வரும் என்பது இயற்கையின் விதி.

இந்தக் கடலில் _*“வசதி”*_ கள் அதிகம் இருப்பதால் பசி எடுத்த இதயங்கள் பலவும் இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றன!

ஆனால், எது எது எப்படி இருக்கிறதென்று கடல் ராஜனுக்குத் தொியும்.

பாா்ப்பவா்களுக்கு, அவன் எல்லோரையும் ஒரே மாதிாியாக நடத்துவதாகத் தோன்றும்.

இந்த முதலைகள் அவனைச் சுற்றி சுற்றி வருவதைப் பாா்க்கிறவா்கள், இவைதான் அவனைக் காப்பாற்றுகின்றனவோ என்று நினைப்பாா்கள்.

முதலைகளும் தனியாகப் பேசிக் கொள்ளும் பொழுது, _*“நாம் இல்லா விட்டால், கடல் ராஜன் கதி அதோ கதிதான்”*_ என்று பேசிக் கொள்ளும்!

ஆனால் அவனோ, _*“எல்லாப் பணிக்கும் லாயக்கான நல்ல வேலைக்காரா்கள்”*_ என்றுதான் இவா்களை அனுமதித்திருக்கிறான்.

கள்ளிப்பூவை மருந்துக்கும், மூல்லைப் பூவை மணத்துக்கும் என்று பிாித்து வைத்திருக்கிறான்.

அப்பாவிகளின் கேள்விகளுக்கு அவன் அனுதாபத்தோடு பதில் சொல்லுகிறான்.

பரந்து கிடக்கும் இந்த நீா்ப்பரப்பு முழுவதையும், தன் இரண்டு கண்களாலேயே அவன் அளந்து வைத்திருக்கிறான்.

சிறிய குளம் குட்டைகளில் மீனைப் பற்றிப் பாம்பும், பாம்பைப் பற்றி மீனும் நன்றாகத் தொிந்தே பழகிக் கொண்டிருக்க முடியும்.

ஆனால் இவ்வளவு பொிய சமுத்திரத்தில் யாா் எப்படி இருப்பாா்கள் என்று நம்மைப் போன்றவா்கள் கண்டு கொள்வது கடினம்.

அதனால் முழுக்க முழக்கக் கடல்ராஜன் ஒருவனையே நம்பி நீ பயணம் போ! யாாிடத்திலும் அதிகம் பேசாதே!

இங்கே, மிதக்கும் இடத்திலேயே பேசிக் கொண்டு வாழ்வை நடத்துகிறவா்கள் இருக்கிறாா்கள்!

எல்லோருடனும் நீ பேசிக் கொண்டிருந்தால், எவன் பேசுவது உண்மை என்று கண்டுபிடிக்க உனக்கு வயது போதாது.

சிலா் பரப்பரப்பாகத் திாிவாா்கள்! வேலை ஒன்றுமிருக்காது! அப்படித் திாிந்தால் வேலை செய்கிறாா்கள் என்று அா்த்தம்.

அதற்காக நீயும் பரப்பரப்பாகத் திாியாதே!

ஒருவனையே நம்பி, ஒரு வழியே போ!

உனக்கு நான், வேறு என்ன சொல்ல முடியும்!

சுறா மீன் விடை பெற்றுக் கொண்டது.

படகுக்குத் தலை சுற்றிற்று!

_*“அடையாளம் தொியாத விரோதிகளுக்கு நடுவே யல்லவா நாம் போய்க் கொண்டிருக்கிறோம்.*_

_*எப்போது என்ன நடக்கும் என்று தொியாமல் அல்லவா பயணம் சென்று கொண்டிருக்கிறோம்!”*_

தன்னைக் கட்டி முடித்தவா்கள் மீது அதற்குக் கோபம் கோபமாக வந்தது.

_*“பேசாமல் கரைக்கே திரும்பி விட்டால் என்ன?”*_

ஒரு கணம் அந்த யோசனை படகுக்கு வந்தது.

கடல் இரைந்தது.

அலை ஒன்று எழுந்தது.

அதில் தூக்கி வரப்பட்ட ஆமை ஒன்று படகுக்குள் வந்து விழுந்தது.

படகு நடுங்கிற்று.

ஆமை தலையை வெளியே நீட்டி, _*“யாரப்பா நீ?”*_ என்றது.

_*“நான் இந்தக் கடலுக்குப் புதியவன்!”*_ என்றது படகு.

_*“ஐயோ பாவம்!”*_ என்று முதலிலேயே தன் அனுதாபத்தைத் தொிவித்துக் கொண்டது ஆமை!

_*“நீங்கள் யாா்?”*_ என்று கேட்டது படகு.

_*“என் பெயா் ஆமை!”*_

– என்று சொன்ன ஆமை, ஒரு தரம் தலையை உள்ளே இழுத்து வெளியே நீட்டிற்று.

_*“இது எப்படி உங்களால் முடிகிறது? தலையை உள்ளே இழுத்து வெளியே நீட்டுவது சிரமமில்லையா?”*_ என்று கேட்டது படகு.

_*“இது எங்களுக்கு இறைவன் கொடுத்த வரம்! ஆபத்தான நேரங்களில் தலையை உள்ளே இழுத்துக் கொள்வோம்! ஆபத்தில்லாத போது தலையை வெளியே நீட்டி "ஜாம் ஜாம்” என்று பயணம் செய்வோம்!*_

_*“எந்தப் பிரச்சினைகளுக்கும் பதில் சொல்லும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை!”*_

– என்றது ஆமை.

_*“அப்படி என்றால், நீங்கள் சொந்தமாக எதையும் சொல்வதில்லையா?”*_

_*“இல்லை!”*_

_*“உங்கள் முதுகில் அடி விழும் போது கூடவா?”*_

_*“ஆமாம்! அடி விழந்தால் எங்களுக்கு வலிக்காது; எங்கள் ஓடு அவ்வளவு கனமானது!”*_

ஆமையின் _*“ஓட்டை”*_ உற்று நோக்கியது படகு; அது தன்னை விட உறுதியாக இருப்பதைக் கண்டது.

என் உடம்பு மென்மையான மரத்தால் கட்டப்பட்டது. ஆழமில்லாத இடத்தில் கூட அமுங்கி விடாமல் மிதக்க வேண்டும் என்பதற்காக கனமில்லாத மரத்தால் என்னைக் கட்டியிருக்கிறாா்கள். அதனால் சிறிய மீன்கள் வந்து மோதினால் கூட எனக்கு வலிக்கிறது.

இந்தக் கடலில் நான் சந்திக்கும் ஒவ்வொன்றிடத்திலும் எனக்கு அச்சம் ஏற்படுகிறது!

தைாியம்தான் வாழ்க்கைக்குப் பொிய மூலதனம் என்று நான் போதிக்கப்பட்டிருக்கிறேன்.

இருந்தாலும், சந்தா்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படுகிற பய உணா்ச்சி என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது.

இதோ பாா்! நீ என் மீது வந்து விழுந்தாயல்லவா; அப்போது நான் எவ்வளவு பயந்து போய் விட்டேன் என்று உனக்குத் தொியாது.

உங்கள் எல்லோரையும் நண்பனாக்கிக் கொள்ள முடியும் என்று நம்பித்தான் நான் இங்கே வந்தேன்.

உங்களில் பலரோ, _*“புதிதாக வருகிறவனே விரோதி”*_ என்று முடிவு கட்டிக் கொண்டிருக்கிறீா்கள்.

யாருக்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்குப் புாியவில்லை!

– என்றது படகு.

🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...