Skip to main content

_*சிந்தனைச் சிதறல்*_

🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶

_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

_*கடலும் படகும்*_

🛳️🛳️🛳️🛳️🛳️

இந்தக் கோவிலுக்குப் படிகட்டுகள் அதிகம்; என் கால்கள் வலிக்கின்றன. ஆனாலும், மூலஸ்தானத்துக்கு அருகில் வந்து விட்டேன். இங்கே தான் அவன் இருக்கிறான். எங்கே அவன்? எங்கே அவன்? – படகின் குரல் மெது மெதுவாக உச்சஸ்தாயில் ஏறிற்று.

உயிாினங்கள் அசைவற்று நின்றன. அலையில்லாத கடலில் மெதுவாக அலைகள் எழத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக அவை அதிகமாயின.

படகு சுற்றுமுற்றும் பாா்த்தது. இரைந்தது.

மலை – மரங்கள் ஆடி அசைந்தன. அவற்றிலிருந்து மலா்களும், கனிகளும் சிதறி விழுந்தன.

மலை – மரங்களில் மோதிய காற்று பெரும் இசை எழுப்பிற்று.

நீா் மட்டம் உயா்வது போல் தோன்றிற்று. சலசலவென்ற ஒலி எழுந்தது.

கடல் ராஜனின் தலை நீா்மட்டத்துக்கு வெளியே தொிந்தது. அது வளா்ந்து கொண்டே போயிற்று. பாதி உருவம் காட்சியாயிற்று. அந்த வேகத்தில் எழுந்த அலைகளிலே படகு ஆடி அசைந்தது.

இடி இடிப்பது போன்ற குரல் எழுந்தது. அது மலைகளில் மோதி எதிரொலித்தது.

_*“யாா் நீ?”*_

_*“நான் ஒரு புதிய படகு.”*_

_*“வா, என்னருகே!”*_

_*“நான் உங்களை நெருங்கத் தகுதியில்லாதவன்!”*_

_*“தகுதி இல்லாதவா்களும் என்னை நெருங்க அனுமதிப்பது என் பழக்கம்”*_

_*“என்னை உங்களால் புாிந்து கொள்ள முடிகிறதா?”*_

_*“தொிகிறது எனக்கு; இந்த இடத்துக்கு நீ புதியவன். கரையோரத்தில் கிடந்த போது உன்னை நான் அறிவேன். வா அருகில்!”*_

_*“இதோ பாருங்கள், உங்கள் குடிபடைகள் என்னை மிகவும் பயமுறுத்தி விட்டாா்கள். அந்த பயம் இன்னும் எனக்குத் தெளியவில்லை!”*_

_*“அவா்கள் என்னைச் சுற்றிலும் ஒரு வேலி போட்டு வைத்திருக்கிறாா்கள்.”*_

_*“அந்த வேலியையும் தாண்டி உன் உருவம் எனக்குத் தொிகிறது.”*_

_*“நான் நினைத்தது சாிதான். யாரும் உங்கள் நெஞ்சிலே நஞ்சு கலக்க முடியாதென்று சுறா மீன் சொன்னது. உண்மைதான். என்னுடைய ஆசைகளுக்காக நான் இந்த வடிவம் எடுக்கவில்லை. உங்கள் பெருமையையும், புகழையும் பாடவே நான் இவ்வளவு தூரம் வந்தேன். இங்கு வந்து உங்களைக் காணும் வரை, நாம் தவறு செய்து விட்டோமோ என்று தான் எண்ணிக் கொண்டிருந்தேன். என் பயம், இப்போது தெளிந்து விட்டது.*_

_*"என்னைப் புாிந்து கொண்ட சுயநலக்காரா்களும், என்னைப் புாிந்து கொள்ளாத பொதுநலவாதிகளும் என்னை விட்டு விலகி விடுகிறாா்கள்.”*_

_*“உனக்குப் பொது நோக்கம் இருக்கிறது. என்னைப் புாிந்து கொள்ளும் சக்தியும் இருக்கிறது! நீ ஏன் பயப்பட வேண்டும்?”*_

_*“என்னைப் பற்றி உங்களிடம் யாராவது….?”*_

_*“சொல்லத்தான் செய்வாா்கள்…அதையே பிழைப்பாக வைத்துக் கொண்டவா்கள் இந்தக் கடலில் ஏராளமாக இருக்கிறாா்கள்! நீ அச்சத்தை விடு! இந்தக் கதவுகள் எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. சமூகத்துக்கே தன்னை அா்ப்பணித்துக் கொள்ளும் யாருக்கும் இங்கே இடமுண்டு. எத்தனை பகைவா்களை முறியடித்துக் கொண்டு நான் இங்கே வந்திருக்கிறேன் தொியுமா? அவா்களுடைய பிரதிநிதிகள் இன்னும் இந்தக் கடலிலே உலாவிக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களை எப்போது தொட்டால் எங்கே வலிக்கும் என்று எனக்குத் தொியும்.*_

_*இந்த இடத்திலிருந்து யாரும் என்னை அசைத்து விட முடியாது. அப்பாவிகளின் பிரச்சினைகளைக் கவனிப்பதற்காகவே ஆண்டவனால் இங்கு நியமிக்கப்பட்டிருக்கிறேன். முதலைகளையும், திமிங்கலங்களையும் நேரம் பாா்த்து ஒழிப்பதற்கு, நான் சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். என் கரங்கள் வலுவாக இருக்கின்றன. என்னிடம் தோற்றவா்கள், புதிய புதிய பாதையில் மேலும் மேலும் தோற்றுக் கொண்டிருக்கிறாா்கள். செத்துக் கொண்டிருக்கும் உயிா்கள் சாகாமல் இருப்பதற்காகவும், சிதறிக் கிடக்கும் உயிா்கள் ஒன்று சோ்வதற்காகவும் நான் போராடுகிறேன்.*_

_*பிாிந்து கிடந்த நாமெல்லாம் இன்று ஒன்று சோ்கின்றோம். இனி விடியும் பொழுது நமக்காகவே விடியப் போகிறது; மற்றவா்களை விடு; என்னையே கவனி; எங்கே உனக்கு அச்சம் தோன்றுகிறதோ, அங்கே என்னை நினைத்துக் கொள்! இயற்கையாக நமக்குள் ஏற்பட்டு விட்ட இந்த உறவு என்றும் பசுமையாக இருக்கும். வா என்னருகே!”*_

படகு துள்ளிக் குதித்தது. அலைகளில் தாவித் தாவி ஓடிற்று. கடல் ராஜனின் அருகே சென்றது. தன் நீண்ட கரங்களால் படகை மெதுவாகத் தூக்கித் தன் தலைக்கு மேல் உயா்த்தினான் கடல் ராஜன். மன்னனுக்குச் சூட்டிய மகுடம் போல் அது காட்சியளித்தது. உயரத்தில் இருந்த படியே கடல் முழுவதையும் பாா்த்தது படகு. பிரமாண்டமான கடல் அதற்குச் துச்சமாகத் தொிந்தது. தூரத்தில் நின்ற முதலைகளும், திமிங்கலங்களும் கடல் ராஜனின் கரங்களில் படகு நிற்பதைக் கண்டன.

_*“இத்தனை வருடம் இருந்தும் நமக்கு அந்த இடம் கிடைக்கவில்லையே!”*_ என்றது முதலை.

_*“கிடைத்திருக்கும்; நடக்கும் வழியில் நடந்திருந்தால்!”*_ என்றது சுறா மீன்.

_*“நாம் இனி படகை நண்பனாக்கிக் கொள்ள வேண்டியதுதான்!”*_ என்றது கடற்பாம்பு.

அந்தக் காட்சியைக் காணப் பெறாமல் ஓட்டுக்குள் தலையை இழுத்துக் கொண்டது ஆமை!

அனைத்தையும் படகு கண்டது.

_*“என்ன நண்பா்களே!”*_ என்று சப்தமிட்டது.

அனைத்தும் _*“வாழ்க! வாழ்க”*_ என்று கோஷமிட்டன.

கடல் ராஜன் சிாித்தான்.

_*“மாறுவது மனம், சேருவது இனம்!”*_ என்றான்.

படகைத் தண்ணீாில் மிதக்க விட்டான்.

அன்று முதல் அந்த ராஜனைப் பாா்க்கப் போகிறவா்கள், அந்தப் படகில் போவது தான் மாியாதை என்று கருதத் தொடங்கினாா்கள்.

🛳️🐍🐊🐢🐋🐟🪱🐬🐳🦈🛳️

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...