Skip to main content

இந்தியர்களின்

இணையற்ற கண்டுபிடிப்புகள்.

பருத்தி

இன்று உலகமே பெருமிதத்தோடு உடுத்துவது பருத்தி இழைகளில் நெய்த காட்டன் ஆடைகளைத் தான்.

சிந்துவெளி நாகரிக காலத்திலேயே இந்தியர்கள் பருத்தி இழைகளில் நெய்த ஆடைகளை அணிந்திருந்தனர்.

பட்டன்.

பட்டன் என்ற ஒரு விஷயம் இல்லாமல் போயிருந்தால், நாகரிகம் என்ற வார்த்தையே உருவாகி இருக்காது.

சிந்துவெளி நாகரிகமான மொகஞ்சதாரோவில் தான் முதன் முதலாக பட்டன் உருவானது.

செஸ்

செஸ் இந்தியர்களின் ரத்தத்தில் ஊறியது.

நம் மண்ணில் தான் சதுரங்க விளையாட்டு தோன்றியது.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசு காலத்தில் தான் செஸ் அறிமுகமானது.

ரெடிமேட் வீடுகள்.

அதிக எடையில்லாத உலோகங்களில் ரெடிமேட் சுவர்கள் செய்து, அடுக்கி சில மணி நேரங்களில் உருவாக்கும் இந்த ரெடிமேட் வீடுகள்,

500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் உருவாகி விட்டது.

ரூலர்

ஸ்கேல் என்ற அளவுகோலுக்கு முன்னோடி தான் இந்த ரூலர்.

உருண்டு நீண்டிருக்கும் ரூல் தடி எனப்படும் இந்த ரூலரால் தான் அந்த காலத்தில் நீளத்தை அளப்பார்கள்.

சிந்துசமவெளி காலத்தில் யானை தந்தம் கொண்டு ரூலர் செய்து பயன்படுத்தினர்.

ஷாம்பு

தலைக்கு சீயக்காய் தேய்த்து குளிக்கும் வழக்கத்தை மாற்றியது இந்த ஷாம்பு.

1762 ஆம் ஆண்டு வங்காள நவாபுக்காக அவரது பணியாளர்கள் உருவாக்கியதே இந்த ஷாம்பு.

எண்களும் பூஜ்ஜியமும் .

தசம எண் வரிசையை அரேபியர்களுக்கு முன்பு பயன்படுத்தியது நாம் தான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான எண் வரிசையை ஏழாம் நூற்றாண்டில் பிரம்ம குப்தர் என்ற கணித அறிஞர் சீரமைத்துக் கொடுத்தார்.

அறுவை சிகிச்சை.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுஸ்ருதர்,

ஆயுர்வேத மருத்துவ முறையில் அறுவை சிகிச்சையின் தந்தையாக கருதப்படுகிறார்.

அதேபோல் இன்று முகத்தை அழகு படுத்தும் பிளாஸ்டிக் சர்ஜரி எனும் அறுவை சிகிச்சையின் தந்தையும் இவர் தான்.

வைரம்

மண்ணுக்குள் புதைந்திருக்கும் வைரக்கல் அரிதான ஒரு கல் என்பதையும்,

அதை பாலிஷ் செய்தால் பளபளக்கும் என்பதையும் கண்டறிந்து,

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆபரணங்கள் செய்து பயன்படுத்தினர் இந்தியர்கள்.

வயர்லெஸ்

கம்பியில்லா தகவல்தொடர்பு எனப்படும் வயர்லெஸ் டெக்னாலஜியை கண்டறிந்தவர்,

நம் நாட்டின் விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ் தான்.

அவரால் அந்த அங்கீகாரத்தை பெற முடியாமல் போய்விட்டது.

கண்ணாடி இழை வயர்.

தொலைத்தொடர்பு வசதிகளை மிக எளிமையாக ஆக்கியவை ஃபைபர் ஆப்டிக் கேபிள் எனப்படும் கண்ணாடி இழை வயர்கள்.

இந்த வயரைக் கண்டறிந்தவர் இந்தியரான நரேந்திர சிங் கபானி என்பவரே.

நம்மாலும் முடியும்.

நம்மில் பலருக்கும் இது தெரியாமல் இருந்தது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

பாரம்பரியமும் பழம் பெருமைகளுமே சிலரை சுயசார்புடன் வாழ விடாமல் சிறைப்படுத்துகிறது.

நாம் உண்மையாக வாழ்ந்தால்,

உண்மையான இலக்கை அடையலாம்.

இனிய காலை வணக்கம்.

💐🌷🙏🙏🙏🌷💐

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...