Skip to main content

நம் தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொக்கிஷங்கள்.

(குருஜியின் வழிகாட்டுதல் )

செல்வ செழிப்பு வளர்வதற்கு.

1.சாப்பிட்ட பாத்திரங்கள் எல்லாம் அலம்பி வைக்க வேண்டும். கட்டத்தில் போட்டு வைக்க கூடாது.

2.ஆண்கள் விளக்கேற்றாமல் பெண்கள் விளக்கேற்ற வேண்டும்.

3. தலைமுடிகள் தரையில் அங்கங்கே இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. வீட்டில் ஒட்டடை சேரவிடக்கூடாது.

5.சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டை பெருக்கி,துடைக்க கூடாது. இரவு நேரம் வெளியில் கொட்ட கூடாது.

6.எச்சில் பாத்திரங்களை ( காபி, பானங்கள் அருந்திய) அதே இடத்தில் வைக்காமல் அலம்பாவிட்டாலும் கட்டத்தில் போட வேண்டும்.

7. பெண்கள் செவ்வாய், வெள்ளி தலை குளிக்க வேண்டும்.

8. ஆண்கள் புதன், சனி எண்ணை தேய்த்து குளிக்கலாம்.

9. குழாயில் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்க கூடாது. சுவரில் ஈரம் காக்க கூடாது.

10. வீட்டில் கரையான் அண்டாமல் இருக்க வேண்டும்.

11. விஷ ஜந்துக்கள், பூச்சிகள் உலாவாமல் இருக்க வேண்டும்.

12.ஈரத்துணியை குழாயின் மேல் ரொம்ப நேரம் சொட்ட வைக்காமல் உடனே உலர்த்திவிட வேண்டும்.

13. உணவுப் பொருட்களை வீணடிக்க கூடாது.

14. உப்பு, பால், அரிசி, சர்க்கரை இவைகள் கடைசி வரைக்கும் தராமல் இருப்பில் இருக்கும் போதே வாங்கி விட வேண்டும்.

15. கிரஹத்தில், வாசலில் குறைந்த பட்சவெளிச்சமில்லாமல் இருளோடு இருக்க கூடாது.

16. ஒரு அருமையான மங்கள இசையோ, மெல்லிசையோ ஒலிர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

17. பெரியவர்கள், குழந்தைகள் யாருமே இல்லை, வராது, வேண்டாம் இந்த மூன்று வார்த்தைகளை உச்சரிக்க கூடாது.

18. பூஜைஅறை பொருட்கள், படுக்கை இவற்றையெல்லாம் வேலைஆட்கள் கொண்டு சுத்தம் செய்ய கூடாது.

19. வாசலிலேயே துடைப்பம், செருப்பு இவற்றை வைக்க கூடாது.

20. எப்பொழுதும் சீரியலை பார்த்து அழுது கொண்டிருக்க கூடாது.

21. நான்தான் இந்த குடும்பத்தை கட்டி காக்கிறேன் என்று ஆண், பெண் இருவரும் அகம்பாவம் கொள்ளகூடாது.

22. (எனக்கு மட்டும் ஏன் இந்த நிலமை) என்று சதாசர்வ காலமும் புலம்ப கூடாது.

23. எனக்கு மட்டும் காலமும், நேரமும் சரியில்லை என்று சொல்ல கூடாது.

24. செலவு செய்வது எதுவானாலும் விரக்தியுடன், புலம்பலுடன் செய்ய கூடாது. சந்தோஷமாக செய்ய வேண்டும்.

25. நல்ல நாள், கிழமைகளில் நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும். ஒதுக்கப்பட்ட உணவுகளை சாப்பிட கூடாது.

26. யாரை பார்த்தாலும் பொறாமை படுவதை நிறுத்துவது.

27. யார் என்ன நல்லது செய்திருந்தாலும் அவரை மனதார வாழ்த்த வேண்டும்.

28. உதவி செய்தவர்களை நன்றி பாராட்ட வேண்டும்.அவர்களுக்கு எதிரியாக செயல் படகூடாது.

29. குடும்பத்துடன் வாரம் ஒரு நாளாவது, 1 மணி நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளுடன் 5 நிமிடமாவது செலவிடுங்கள்.

30. நல்ல எண்ணம், நல்ல பொழுதாக விடிந்து, நல்லாதக முடிப்பேன், நான் நன்றாக சந்தோஷமாக இருக்கிறேன் என்ற எண்ணம் வேண்டும்.

விளக்கேற்றும் போது குறைஒன்றும் இல்லை கோவிந்தா என்று மூன்று முறை செல்லவும்.

Always think about Positive.

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...