Skip to main content

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன்,

அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து,

தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான்.

இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான்.

அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி

அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார்.

குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.

முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை.

மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார்,

“இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது”.

இளைஞன், ஒருவருக்கு விற்பனைசெய்ததாக சொன்னான்.

முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது.

“இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.

விரைவில் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால்,

உன் வேலை பறிபோய்விடும்”

என்று எச்சரித்தார்.

“சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?”

இளைஞன் சொன்னான்,

“933005 பவுண்டுகள்”.

அதிர்ச்சியடைந்த முதலாளி,

“அப்படி என்ன விற்றாய்”

வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள்,

தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்.“

"ஆனால், அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?”

இது முதலாளி.

“உண்மைதான். இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்கப்

படகு இருக்கிறதா என்று கேட்டேன்.

அவர் இல்லை என்றதால்,

நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி,

ஓர் இருபது அடி நீளப்

படகை விற்றேன்.

இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு,

அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால்,

ஒரு டீலக்ஸ் 4 x 4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் காரையும் விற்றேன்.

நடுவே ஓய்வில் அவருக்குத்

தங்க இடம் இல்லாததால், மிகப்பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்”

“அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?”

நம்ப முடியாத முதலாளி கேட்டார்.

“இல்லை, அவர், தனக்குத் தலை வலிப்பதாகவும்,

ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார்.

நான்தான்,

தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுதுபோக்கு என்று சொன்னேன்.”

முதலாளி கேட்டார்,

“ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?”

“அங்கு *தனியார் மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப் பிரிவு ஆலோசகராக* இருந்தேன்,

ஏன் ?”

“இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்தக் கடையைப் பார்த்துக்கொள்,

நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்துவிட்டு வருகிறேன்”.

😀😀😀😂😂😂

படித்ததில் கவர்ந்தது.

👍👍🏿👍🏻👍🏼👍🏽👍🏾👍

இப்படித்தான் இருக்கிறது…

*இன்றைய மருத்துவ உலகம்.*

(சிரிப்பதற்கு மட்டுமன்று… சிந்திப்பதற்கும் !)

👍

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...