மனிதன் மூன்று தருணங்களில் மிருகமாகிறான் 1. மிகவும் எதிர்பார்த்த ஒன்று தோல்வியில் முடியும்போது ஏற்படும் விரக்தியினால்., 2 . தனக்கு நெருங்கியவர்களால் செயல்படுத்தப்படும் துரோகத்தினால் ., 3 . உற்றம், சுற்றம், நட்பு , ஆகியோரால் ஏற்படுத்தப்படும் அவமானத்தினால்., இந்த மூன்றும் நம்மால் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும்,. $$$$$$$$ ¥¥¥¥¥¥¥ $$$$$$$$$ நம்பிக்கையற்று, இந்த உலகத்தின் மீது வெறுப்பில், இருக்கும் ஒருவன் இந்த செயல்களினால் , “ அன்புமிக்க, கருணை கொண்ட மனிதனாகிறான்” . 1 . தன்னால் மிகவும் வேண்டப்பட்ட , தேடப்பட்ட ஒரு பொருள் அல்லது எதுவோ வெறித்தனமாய் முயன்றும் கிடைக்காமலே இருந்து, ஏதோ ஒரு கருணையால், தேவையான அளவுக்கு கிடைக்கும் பொழுது,. 2. தன்னால் முடிந்த அளவு ,முயன்று தோல்வியை , தழுவி துவண்டு விழும் சமயத்தில், எதிர்பாராமல் கிடைத்த உதவியின் மூலம் ,அந்த தோல்வி வெற்றி ஆகும்போது., 3. நோயினால் போராடி, துவண்டு உயிர் பிரிந்து விடும், எல்லாம் முடிந்து விட்டது, என்று சொல்லப்பட்ட தருணத்தில் ஏதோ ஒரு அதிசயத்தினால் மீண்டும் உயிர் பிழைத்து உறவுகளோடு ஒன்றிணையும் பொழுது., இந்த மூன்ற...