Skip to main content

குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்

🌹🌹💐💐 🙏🏻 💐💐💐🌹🌹

*இன்றைய சிந்தனை.(14.10.2023)*
...................................................................

*"...!"*
..................................................................................

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்தவுடன், என்ன வேலை இருந்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, அவர்களுடன் சிறிது நேரமாவது, உரையாடவேண்டும். 

அந்தக் குழந்தைகளிடம், அரவணைப்புடன், "இன்னிக்கு ஸ்கூல்லே என்ன நடந்துச்சு.? என்று அன்பாக விசாரிக்க வேண்டும்.

அந்தக் குழந்தைக்கு, பள்ளியில், ஏதும் மன ரீதியான பாதிப்புகள் இருந்தால், உடனே அதைக் கலைய முயற்சி செய்ய வேண்டும். 

இப்படி நீங்கள் அன்பாக பேசினாலே போதும். குழந்தைகள், எப்போதும் உங்கள் பக்கம் தான்.

அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டியது, பெற்றோர் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இதைச் சொன்னால் அம்மா அடிப்பார்கள், என்ற பயம் இல்லாமல், எதைப்பற்றியும் அம்மா, அப்பாவிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

அப்போதுதான் வெளியில் அவர்களுக்கு நடக்கும் கெட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். 

அன்புமதி ஒரு 10 வயது சிறுவன். அவனது தந்தை தனது மகனுடன் நேரத்தை செலவிட முடியாத மிகவும் ஓய்வில்லாத தொழிலதிபர். 

அன்புமதி தனது தந்தையின் கவனத்திற்காக ஏங்கினான். அவன் தனது நண்பர்களைப் போலவே வெளியில் சென்று தந்தையுடன் விளையாட விரும்பினான்.

ஒரு நாள், மாலையில் தனது தந்தையை வீட்டில் பார்த்த மகன் ஆச்சரியப்பட்டான். 'அப்பா, உங்களை வீட்டில் பார்ப்பது ஒரு பெரிய ஆச்சரியம்" என்று கூறினான்.

'ஆமாம் மகனே, என் அலுவலக கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனவே நான் வீட்டில் இருக்கிறேன். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து நான் விமான நிலையத்திற்கு செல்வேன்" என்று அவனது தந்தை பதிலளித்தார்.

அன்பு சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். பின்னர் அவன், 'அப்பா, நீங்கள் ஒரு நாளில் அல்லது அரை நாளில் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.

தந்தை குழப்பம் அடைந்து மகனிடம்'நீ ஏன் இந்த கேள்வியைக் கேட்கிறாய்?" என்று கேட்டார். 

ஆனால் விடாப் பிடியாக 'ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டான். 

 'ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10 ஆயிரம் இருக்கும்" என்று பதில் அளித்தார்.அன்பு தனது அறைக்கு ஓடி, தனது சேமிப்பு களைக் கொண்ட உண்டியலுடன் கீழே வந்தான்.

'அப்பா, எனது உண்டியலில் 20 ஆயிரம் சேர்த்து இருக்கிறேன்.
எனக்காக இரண்டு மணிநேரத்தை ஒதுக்க முடியுமா? 
நான் கடற்கரைக்குச் சென்று நாளை மாலை உங்களுடன் இரவு உணவு சாப்பிட விரும்புகிறேன். இதை உங்கள் அட்டவணையில் சேர்க்க முடியுமா?" என்று கேட்டான். தந்தை பேச்சற்று இருந்தார்!

*ஆம்..,நண்பர்களே...!*

*நீங்கள், எவ்வளவு செலவு செய்து, குழந்தைக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்தாலும், நீங்கள் குழந்தகளுக்கு ஒதுக்கும் நேரம்தான் ஒன்று தான், அந்தப் பணத்தை விட உயர்ந்தது"...*

*- உடுமலை சு தண்டபாணி*✒️

🌹🌹💐💐 🙏🏻 💐💐💐🌹🌹

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...