Skip to main content

யார் குற்றவாளி?

🍀நான் குற்றவாளியா? 🍀

*....*

கைபேசியான என்மீது குற்றம் சொல்லிக் 
கொண்டிருப்பதை விட்டுவிட்டு
நீங்கள் 
குற்றம் செய்யாமல் 
இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் "பேசிக்கொள்வீர்கள்"
என்றுதான் நான் நினைத்தேன்! 
நீங்கள் 
"பேசியே! கொல்வீர்கள்" என்று 
நான் நினைக்கவே இல்லை.

"பொழுதுபோக்காக" 
என்னில் 
சில இருப்பது உண்மைதான்.
ஆனால் 
நீங்கள் அதில் 
"பொழுதையே! போக்கினால்" 
அதற்கு நான் பொறுப்பல்ல.

கடமை 
கண்ணியம் 
கட்டுப்பாடு என்று பேசுவீர்கள்
அதெல்லாம்
வெறும் வாய் சொல்தானா?

பிள்ளைகள் 
விளையாட்டு விளையாடுவதால் படிப்பு 
கெட்டுப்போகிறது என்று
குற்றங்களை 
என் மீது கொட்டுபவர்களே அன்று
குழந்தை பருவத்தில் 
நிலாவைக்காட்டி
மலர்களைக்காட்டி பாடிக்காட்டி ஆடிக்காட்டி 
பாலூம் சோறும்
ஊட்டினார்கள்.
நீங்களோ
உங்களுடைய 
சோம்பேறித்தனத்தால் 
"என்னை காட்டி "
சோறும் பாலும் ஊட்டி
கெட்ட பழக்க வழக்கங்களை 
கற்று கொடுக்கின்றீர்கள்.
"தொட்டில் பழக்கம் 
சுடுகாடு வரை" என்பது 
உங்களுக்கு தெரியாதா என்ன ?

என்னுடைய நன்மைகளை 
நான் சொல்கிறேன் 
கொஞ்சம் கேளுங்கள்.
 
என்னில் கடிகாரம் இருக்கும் 
கட்டவேண்டியதில்லை.

காலண்டர் இருக்கும் 
கிழிக்க வேண்டியில்லை.
 
கேமரா இருக்கும் 
ஃபிலிம் போட 
வேண்டியில்லை.
 
மின் விளக்கு இருக்கும் 
மின்சாரக் கட்டணம் 
செலுத்த வேண்டியதில்லை.
 
பாட்டு கேட்கலாம் 
கேசட் போடவேண்டியில்லை.
 
கால்குலேட்டர் பயன்படுத்தலாம்
சக்தி தேவையில்லை.
 
வழி காட்டுவேன் 
யாரிடமும் கேட்க 
வேண்டியதில்லை.
 
பணம் அனுப்புவேன் 
கூலி கொடுக்க 
வேண்டியதில்லை.
 
தகவல்களை 
அனுப்பி வைப்பேன் 
தேடிச்செல்ல 
வேண்டியதில்லை.

அவசரத்துக்கு மட்டுமல்ல 
அன்றாடம் உதவிகளையும்
செய்வேன் 
ஆனால் 
உங்களிடம் நன்றியகை்கூட 
நான் எதிர்பார்ப்பதில்லை.
"சொல்லும் நேரத்திற்கு 
எழுப்பி விடுவேன்"
என்றுமே தவறியதில்லை.
 நினைவுப்படுத்தச் சொன்னதை
"நினைவுபடுத்துவேன்" 
என்றுமே மறந்ததில்லை.

உங்களுக்கு 
ஒன்று தெரியுமா ?
காவலர்களுக்குப் பயப்படாத 
அரசியல்வாதிகளும் சமூகவிரோதிகளும் 
அதிகாரிகளும் கூட 
என்னில் இருக்கும்
சமூக ஊடங்களுக்கு
பயப்படுவார்கள் 
தெரிந்து கொள்ளுங்கள்.

"பகுதி நேர 
வேலை" வாய்ப்பைக் கூட 
ஏற்படுத்திக் 
கொடுத்திருக்கிறேன் 
கொஞ்சம் பார்த்து பேசுங்கள்.

எதில் இல்லை தீமை? 
மின்சாரத்தை 
தவறாகத் தீண்டினால் 
மரணத்தை 
ஏற்படுத்தவில்லையா? 
நெருப்பை தவறாக 
பயன்படுத்தினால் 
எதுவானாலும் எரித்து 
சாம்பலாக்கவில்லையா? 
வெள்ளமாக வரும் தண்ணீர்
ஊரையே 
அடித்துச் செல்ல வில்லையா?
பொறுமைக்கு 
உவமையாக சொல்லும் 
பூமியே! 
நிலநடுக்கத்தால் 
புதைக்குழியாகவில்லையா?

அளவுக்கு மீறி உண்டால் 
உணவே 
ஆளைக்கொல்லவில்லையா? 


வாகனம் 
ஒரு மனிதனின் மீது 
மோதிவிட்டால் 
வாகனத்தைத் தானே 
கைது செய்ய வேண்டும் ?
ஏன் வாகனத்தை இயக்கிய
 ஓட்டுநரைக்
கைது செய்கின்றீர்கள் ?
அப்படி என்றால் 
நான் குற்றவாளியா?
என்னை இயக்கும் 
நீங்கள் குற்றவாளியா.

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...