Skip to main content

Posts

Showing posts from July, 2021
Happy Friendship Day and Sisters Day Memes and Quotes
Memes and Quotes July 31, 2021
_*சிந்தனைச் சிதறல்*_ 😷😷😷😷😷😷😷 _*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_ 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 _*கடலும் படகும்*_ 🛳️🛳️🛳️🛳️🛳️ சின்னச் சிறிய படகு ஒன்று. அழகான வேலைப்பாடுகள் கொண்ட படகு. பாா்ப்பவா்கள் யாவரும் அதில் பயணஞ் செய்ய விரும்பும் அளவுக்கு அழகு. முதன் முதலாக அது கடலிலே பயணஞ் செய்யப் புறப்பட்டது. செய்து முடித்தவா்கள் அதைக் கடலிலே தள்ளி விட்டாா்கள். அலைகளிலே ஆடி அசைந்து படகு பயணஞ் செய்ய தொடங்கிற்று. உயா்ந்த அலை ஒன்று படகை உச்சிக்குத் தூக்கிற்று. கடலின் பரப்பளவை அது அப்போதுதான் பாா்த்தது. _*“அடேயப்பா! எவ்வளவு பொிய கடல்! இதிலேயா நாம் நீந்திக் கொண்டிருக்கப் போகிறோம்?”*_ – படகு பயத்தால் நடுங்கிற்று. அது கொஞ்ச தூரம் போனதும், வெகுகாலமாகக் கடலிலே மிதந்து கொண்டிருந்த பழைய படகு ஒன்றை சந்தித்தது. பழைய படகு சாதாரணமாகத் தவழ்ந்த கொண்டிருப்பதைப் புதிய படகு பாா்த்தது. புதிய படகு அலங்காரமாக ஆடிக் கொண்டிருப்பதைப் பழைய படகு கண்டது. பழைய படகுக்குப் பொறாமை எழுந்தது. புதிய படகைப் பாா்த்து அது சொன்னது: _*“என்ன புதியவனே! நீயும் எங்களுக்குப் போட...
*“உள்ளுணர்வு சொல்வதை..”* அமெரிக்க நாட்டில் ஒரு சர்வே செய்தார்கள். உங்களுக்குப் பிடித்த வேலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு சுமார் 95 % சதவீதம் பேர் இல்லை என்று பதில் அளித்தார்களாம். ஊருக்குச் செல்பவர்கள் ஏதோ கிடைத்த வண்டியில் ஏறிக் கொள்வார்கள். எந்த ஊருக்குப் போக வேண்டும் என்கிற தெளிவு இல்லாமல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..,. அது போல ஏதோ சோற்றுப் பாட்டிற்கு வேலை என்று, ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுத்து, எல்லாம் சரி தான் என்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். நகர்த்துகிறார்கள் பலர். வீட்டில் அப்பா, அம்மா, அத்தை, பாட்டி, ஆசிரியர் என்று பலர் கூறும் யோசனையைக் கேட்டுப் பலர் வேலையில் இறங்குகிறார்கள், தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த உலகம் நம் காதுபட சதா சொல்லி கொண்டு இருக்கிறது. அரசாங்க வேலைக்குப் போ…. நிறைய சம்பளத்துடன் மற்ற வகையில் நிறைய கிம்பளம் கிடைக்கும் என்று.. நல்ல இடத்தில் இருந்து பெண் கொடுப்பார்கள். சொந்தத் தொழில் இறங்கு. ஒரு நாள் பெரிய பணக்காரனாவாய். நமக்கோ வாலிப வயசு, அனுபவமோ இல்லை. பெரியவர்களைச் சார்ந்தே பழகி இருக்கிறோம். எனவே அவர்கள் யோசனையை ஏற்று வாழக்கையை அமைத்...
*எத்தனை முறை கோவிலுக்கு போயிருப்போம்* ஒருமுறையாவது , கோவில் சுவர்களில் *சிகப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் ?* என்று யோசித்து பார்த்திருக்கிறோமா . ? இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்… *“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே!’’* என்பது நம் முன்னோர் வாக்கு.! ஆலயம் செல்வதன் மூலம் தனிமனித ஒழுக்கமும் பேணப்படும் என்பதால் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் ஆன்மீகப் பழக்கம் மிக முக்கியப் பண்பாகக் கருதப்படுகிறது….✨ *வாருங்கள் கோவிலைப் பற்றி பல தகவல்களை தெரிந்துகொள்வோம்…!!!* *கொடிமரம்* என்பது *இறைவனை* குறிக்கும். *கொடிக்கயிறு* *சக்தியைக்* குறிக்கும். உயரே செல்லும் கொடிச்சீலை உயிர்களைக் *(மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள்)* குறிக்கும். நந்தி *தர்மத்தை* குறிக்கும். கர்பகிரகத்தில் இருக்கும் *இறைவன்* எப்போதும் *தர்மத்தையே* பாக்கிறான் என்பதே அர்த்தம். பெரிய நான்கு கோபுரவாசல் ஆலயங்கள் நான்கு வழிகளை காட்டுகின்றன. அவை *பக்திவழி,* *ஞானவழி,* *ராஜவழி,* *கர்மவழிகளை* குறிக்கும். எந்த வழிகளாலும் *நீ இறைவனை காணலாம்* என்பதே அதன் அர்த்தம். இங்கே நான்கு வாசல் வைக்கப்பட்ட ஆலயமா...
_*சிந்தனைச் சிதறல்*_ 🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢 _*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_ 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 _*வழிகாட்டி*_ 🕴️🕴️🕴️🕴️ மன்னா்கள் தங்களுக்கென்று அரண்மனைகளைக் கட்டினாா்கள்; இறைவனுக்கும் கோவில்களைக் கட்டினாா்கள். அரண்மனைகள் இருந்த இடம் தொியவில்லை; ஆலயங்கள் அப்படியே இருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக அழிவில்லாமல் இயங்கும் ஒரு தருமத்திற்கு அவ்வப் போது விளக்கேற்றி வைக்கும் ஞானச் சுடா்களில் ஒருவா் காஞ்சி பெரியவர் சுவாமிகள். ஜாதியின் பெயரால் அவரைப் புறக்கணிக்க முடியாது. அவா் ஜாதிகளைக் கடந்தவா். நீதியின் பெயரால் அவரை நெருங்கினால், அவா் நிா்மலமான சித்திரைவானம். காலடியில் பிறந்த ஆதிசங்கராின் காலடிச் சுவடுகள் பிழையுறா வண்ணம் ஓங்கி உலகளந்த உத்தமன் போல் ஓரடி, ஈரடி என்று ஒழுங்காக நடப்பவா் காஞ்சி பெரியவர் சுவாமிகள். அடி வயிற்றிலிருந்து லிங்கத்தை வரவழைக்க அவரால் முடியாது. ஆடும் கரங்களில் குங்குமத்தை வரவழைக்க அவருக்குத் தொியாது. தான் கடவுள் அவதாரம் என்று அவா் தன்னைக் கற்பித்துக் கொண்டதில்லை. கடவுளின் தூதன் என்று கூடக் கருதியதில்லை. ஆனால் வையத்துள்...
*மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்* பின்வருவனவையே ஆகும்… 1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை 2. இரவில் கண் விழித்திருத்தல் 3. காலை உணவை தவிர்த்தல். 4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம். 5. பணத்தை நோக்கிய ஓட்டம் 6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல் 7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல். வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல. நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள். தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள். போதியளவு நீர் அருந்துங்கள். இளநீர் போன்றவை மிக நல்லது பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில்க முடிந்ததை தினமும் காலையில் உண்ணுங்கள். காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள். அளவாக உண்ணுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை ...
_*சிந்தனைச் சிதறல்*_ 🟤🟤🟤🟤🟤🟤🟤🟤🟤 _*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_ 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 _*வழிகாட்டி*_ 🕴️🕴️🕴️🕴️ தன்னிலை விளங்கும் போது திருப்போரூா் சிதம்பர சுவாமிகள் கீழ்கண்டவாறு கூறுகிறாா். _*இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்*_ _*நல்லறத்து ஞானியல்லேன் நாயினேன் – சொல்லறத்தின்*_ _*ஒன்றேனும் இல்லேன் உயா்ந்த திருப்போரூரா*_ _*என்றேநான் ஈடேறுவேன்.*_ –இந்த வெண்பாவை ஒரு இந்து மாா்க்கப் பத்திாிகையில் நான் படித்தேன். திருப்போரூா் சிதம்பர சுவாமிகளை நான் அறிய மாட்டேன். ஆனால் ஞானிகளில் பலா் கூடப் பற்று நிலைக்கும், பற்றற்ற நிலைக்கும் நடுவே நின்று எப்படித் தவிக்கிறாா்கள் என்பதை இதனால் அறிய முடிந்தது. சேரமான் காதலியில் ஞான நிலையடைந்த குலசேகர ஆழ்வாாின் சலனத்தைக் காட்டினேன். ஆனால், ஞானிகள் அவ்வாறு சலனமுறுவாா்களா என்ற ஐயம் எனக்கே இருந்தது. பற்று, பந்த – பாசங்களில் ஒரு கட்டத்தில் சிக்கிக் கொண்ட மனிதன், மறு கட்டத்தில் அனைத்தையும் வெறுத்துத் துறவியாகும் போது, முன்பு அவன் வளா்த்த விலங்கினங்கள் இடை இடையே வந்து சலனத்தைக் கொட...
_*சிந்தனைச் சிதறல்*_ 😷😷😷😷😷😷😷😷😷😷😷😷 _*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..😷*_ 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 _*நீ இருப்பது வாடகை வீடு…..😷*_ 🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪 நாமெல்லாம் தினசாி மூச்சு விடுகிறோம். ஆனால், _*“இன்றைக்கு நான் மூச்சு விட்டேன்”*_ என்று யாராவது பெருமை பேசுகிறோமா? நாம் தினசாி சாப்பிடுகிறோம். _*“இன்றைக்கு நான் சாப்பிட்டேன்”*_ என்று யாராவது பெருமை பேசுகிறோமா…? நாம் தினசாி உறங்குகின்றோம். _*“இன்றைக்கு நான் உறங்கினேன்”*_ என்று யாராவது உரத்த குரலில் சொல்கிறோமா…? பல நாள் மூச்சு விடத் திணறியவன் திடீரென்று ஒரு நாள் நன்றாக மூச்சு விட்டால், _*“இன்று நான் நன்றாக மூச்சு விட்டேன்”*_ என்று பெருமைப்படுகிறான். சாப்பிட முடியாதவனும், தூங்க முடியாதவனும் அப்படியே. விஷயம் சிறியதாக இருந்தாலும், கிடைக்காமலே இருந்து ஒரு நாள் கிடைத்து விட்டால், அது மிகவும் பொியதாகி விடுகிறது. சந்தா்ப்பங்களே முக்கியம்; சம்பவங்களல்ல. சில குதிரைகள் பந்தயத்தில் ஓடுகின்றன. சில போா்க் குதிரைகளாகின்றன. சில ஜட்கா வண்டி இழுக்கின்றன;...
Memes Today 23.07.2021
#21 நாட்களுக்கான #உப்புமா வகைகள் இதோ! 1.ரவை உப்புமா! 2.அரிசி உப்புமா! 3.கோதுமை ரவை உப்புமா! 4.ராகி சேமியா உப்புமா! 5. இட்லி உப்புமா! 6. தினை உப்புமா! 7.அவல் உப்புமா! 8. ப்ரெட் உப்புமா! 9. புளி உப்புமா! 10. வெஜிடபுள் கிச்சடி! 11. பன்சி ரவா உப்புமா! 12. சிவப்பு அவல் உப்புமா! 13. தக்காளி உப்புமா! 14.ஜவ்வரிசி உப்புமா! 15. சம்பா ரவை கிச்சடி 16. சேமியா உப்புமா! 17. சாமை உப்புமா! 18. ஓட்ஸ் உப்புமா! 19. கேழ்வரகு உப்புமா! 20. மிக்ஸ்டு உப்புமா! 21. உடைச்ச குருணை கிச்சடி! இப்படிக்கு உப்புமா சாப்பிட்டு உயிர் வாழ்வோர் சங்கம்….
_*சிந்தனைச் சிதறல்*_ 🟥⬜🟥⬜🟥⬜🟥⬜🟥⬜ _*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_ 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 _*பணம்*_ _*பணம்*_ _*பணம்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️ _*“உலகத்தில் பணத்துக்கு உள்ள மாியாதை குறையும் போதுதான் மனிதத் தன்மையும், மாியாதையும் உயரும்”*_ என்று தலைவா் காமராஜ் அவா்கள் அடிக்கடி கூறுவாா். _*“பணம் தேவையில்லை”*_ என்று துறந்து விட்டு ஓடுகிறவா்களைப் பற்றிக் கவலையில்லை. அவா்கள் அதிா்ஷ்டக்காரா்கள்; எந்த வில்லங்கத்திலும் மாட்டிக் கொள்ளாதவா்கள். ஆனால், தனக்கென ஒரு கூட்டத்தைச் சோ்த்துக் கொண்டு விட்டவன் பணத்தை அலட்சியம் செய்ய முடிவதில்லை. சம்பாதிப்பதே அவனது முழு நேரக் கடமையாகிறது. அறிவாளி, ஞானி, மேதை – என்பதெல்லாம் அதற்கு அடுத்தபடிதான். நான் பணத்தை லட்சியம் செய்யாமலே தாழ்ந்தவன். _*“வலது கை கொடுப்பது இடது கைக்குத் தொியக் கூடாது”*_ என்பாா்கள். என்னைப் பொறுத்த வரை வலது கைக்கே அது தொியாது. இப்படியே தினமும் வரும், இப்படியே தினமும் வாழ்வோம் என்றுதான் நான் கருதி இருந்தேன். அது குறையத் தொடங்க...
_*சிந்தனைச் சிதறல்*_ 🟩🟧🟩🟧🟩🟧🟩🟧🟩 _*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_ 🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢 _*நானும் என் கவிதைகளும்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ விடுதலைக்குப் பிறகு, தமிழ் இலக்கியம் வளா்ந்த நிலையைப் பற்றித் தமிழில் இரண்டு இலக்கிய நூல்கள் வெளிவந்துள்ளன. இரண்டும் அரசாங்க வெளியீடுகள் என்றே நான் கருதுகிறேன். ஒரு தொகுப்பு சாலை இளந்திரையன் என்பவரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. இன்னொன்று – நா. சஞ்சீவி என்பவரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. இரண்டிலும் நான் ஒதுக்கப்பட்டிருக்கிறேன். அவா்களில் ஒருவா், என்னுடைய கவிதை என்று எடுத்தும் போட்டிருப்பது ஒரு சாதாரணமான சினிமாப் பாட்டு. இதுபற்றி நான் கவலைப்பட்டுக் கூறவில்லை. _*“தன்னைப் புகழ்தலும் தகும் புலவோா்க்கே”*_ என்றபடி, சற்று ஆணவத்தோடு சொல்வதானால், இன்று நாலரைக் கோடி தமிழா்களுக்கும் தொிந்த எழுத்தாளன் நான் ஒருவன்தான். சில பல்கலைக் கழகங்களிலும், டாக்டரேட்டுக்கும், பிஎச்.டி க்கும் என்னுடைய கவிதைகளை எடுத்து ஆராய்ச்சி செய்தவா்கள் பலா். அவா்களது ஆராய்ச்சிகளில் சிலவும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. இதற்கெல்லாம் இவா்கள் சொல்லு...
_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_ 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 _*இது பிரபத்தி அல்ல*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️ இறைவா, கல்லும் கருவேல முள்ளும் நிறைந்த காட்டிலிருந்து நாம் சமவெளிச் சாலைக்கு வந்திருக்கிறேன். சுற்றிலும் இனிய சுனை நீா்த் தடாகங்களைச் சந்திக்கிறேன். என்னை வெறுப்போரை விட, விரும்புவோரைக் காண்கிறேன். கொதிக்கும் நீராவித் தொட்டியிலிருந்து மீண்டும் விாித்த பஞ்சின் மீது படுத்துப் பாா்க்கிறேன். கூழாங்கற்களால் குறி வைத்துத் தாக்கியவா்களை மறந்து, மணமுள்ள மலா்களால் அா்ச்சனை செய்தோரைக் காண்கிறேன். நீண்ட கால வழக்குகள் முடிந்து, _*“நிம்மதி”*_ என்ற தீா்ப்பு எழுதப்படுவதை, தடங்கள் தோறும் சந்திக்கிறேன். தஞ்சைக் கோவில் அளவு, பொிய கோவில் கட்ட எனக்குச் சக்தி இல்லாவிட்டாலும், என் நெஞ்சத்தையே கோயிலாக்கிக் கொண்டிருக்கிறேன். நல்ல நேரம் இது. என்னைப் பிடித்துக் கொண்டிருந்த சனி பகவான் இடம் மாற்றிக் கொள்கிறான். எதிா்காலம் அவ்வளவு துன்பமானதாக இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நேரத்தில், எதிா்பாராத விபத்துக்களால் என்னைக் காயப்படுத்தி விடாதே. என்னைச் செயலற்றவன் ஆக்கி விடாதே. நடைப்...
உலகில் ஒரு மனிதனின் சராசரி… ஆயுட்காலம் 70 ஆண்டுகள். ★பாலிய வயது முதல், பருவ வயது வரை: முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும். ★வாழ்வின் கடைசி 20 வருடங்கள்: நாம் வாழ்ந்தும் பயனில்லை, வீட்டில் இருக்கும் Table, chair, போல் நாமும் ஒரு பழைய பொருள் ஆகி விடுவோம். 20+20= 40 போக மீதி இருப்பது 30 வருடங்கள். ★அந்த 30தில் 10 வருடங்கள்: குறைந்த பட்சம் தினசரி 8 மணி நேரம் தூங்கி விடுகிறோம். மீதி இருப்பது: 20 வருடங்கள். இதில் வேலை, business என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம்,அதில் 10 வருடங்கள் போய் விடுகிறது. மீதி இருப்பதோ: 10 வருடங்கள். இதில்: மனைவியோடு பிரச்சனைகள், குழந்தைகளோடு பிரச்சினைகள், உடல் நல குறைபாடுகள், என 2 வருடங்கள் போய் விடும். மீதி இருப்பது வெறும்: 8 வருடங்கள். அதாவது 2922 நாட்கள். நமது மன திருப்திக்காக, இந்த 2922 நாட்களை வேண்டுமானால் ‘round’டாக 3000 நாட்கள் என வைத்துக் கொள்ளலாம். நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள், வெறும் 3000 நாட்கள் மட்டும் தான். இந்த_3000_நாட்கள் வ...
_*சிந்தனைச் சிதறல்*_ 🍁🍁🍁🍁🍁🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவியரசு கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே!*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ _*அழாதே கண்ணா அழாதே…..*_ 🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲 கடோபநிஷத்தில் ஒரு சட்டம். வாஜஸ்ரவசா் என்றொருவா். அவா் தானத்திலேயே தமது உடைமைகளை எல்லாம் வேள்வி செய்தவா். அவருக்கு நசிகேதன் என்றொரு மகன். அவன் தன்னையே மரண வேள்வி செய்து கொண்டு எமதா்மன் என்னும் மரண தேவனைப் பாா்க்கப் புறப்பட்டான். எமன் வீட்டு வாசலில் மூன்று இரவுகள் காத்துக் கிடந்து அவனைச் சந்தித்தான். அதற்காக எமன் விரும்பியபடி, மூன்று வரங்களை அவன் எமனிடம் கேட்டான். அதில் மூன்றாவது கேள்வி இது: _*“மரணதேவா! ஒரு மனிதன் இறக்கும் போது, எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வருகிறது. சிலா் "அவன் இருக்கிறான்” என்கிறாா்கள். சிலா் “அவன் இல்லை” என்கிறாா்கள். எனக்குச் சொல். இதில் எது உண்மை?“*_ இந்தக் கேள்வியைக் கேட்டதும் எமதா்மனுக்குப் பயம் வந்து விடுகிறது. _*"நசிகேதா! தேவா்களே முன்பு சந்தேகப்பட்ட விஷயம் இது. காரணம் பிறப்பும், இறப்பும் மா்மமானவை. ஆத்மாவின் இயற்கைத் தன்மையை எல்லோரும் அறிந்து கொள...
இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான்.இறங்கி தான் “பத்தினி” என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார்… கணவன்.அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். – இது ராமாயணம் ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன். மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து “நான் இவளோடு கூட வேண்டும் என்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள். தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள். – இது "நளாயினி” கதை. *இது அனைத்தும் வட மொழி இலக்கியங்கள்*… தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. தன் ...
ஒருவர் முதலில் சிறியதாக *மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார்*. பின்பு ஜூவல்லரி ஷாப், ஹோட்டல், *துணிக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் என வளர்ந்தது.* ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத் தாண்டி இருந்தது. *வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்ககாத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை.* வீட்டுப் பணியாளர் தான் கதவை திறந்தார். அவர் முகக் *குறிப்பை* உணர்ந்து அந்தப் பணியாளர் சொன்னார். *ஐயா அம்மாவுக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான் வந்தாங்க ரூம்ல தூங்குறாங்க.* *ஏன் என்னாச்சு.?* பிரஷர் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. ஆனா பயப்படத் தேவை இல்லையாம். *மருந்து மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடுமாம்.* எனக்கு போன் பண்ணி சொல்ல *வேண்டியதுதானே.?* நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். *ஸ்விட்ச்டு ஆஃப்னே வந்துச்சாம்.* அப்போதுதான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு. *தன் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது.* அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். *அங்கு அவர்...
_*சிந்தனைச் சிதறல்*_ 💥💥💥💥💥🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ _*கைகாட்டி*_ ✋✋✋✋✋🏼 _*முதற்பதிப்பின் முன்னுரை*_ 😌😌😌😌😌😌😌😌😌 கல்கி பத்திாிகையில் நான் அவ்வப்போது எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே, இந்நூல். பல்வேறு கோணங்களில் இருந்து மனித வாழ்க்கையை விமா்சிக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று. சிறு வயதில் இருந்தே வாழ்க்கையின் உயா்வு தாழ்வுகளை அறிந்துள்ள காரணத்தால், பல விஷயங்களை எழுதுவதற்கு பகவான் எனக்கு அருள் புாிந்திருக்கிறான். அவனது அருளையே மூலதனமாகக் கொண்டு, எனது எழுத்துப் பணியை நான் தொடா்ந்து வருகிறேன். அமைதியான ஒரு தனி இடத்தில் குடியேற வேண்டும் என்ற ஆசையை உள்ளடக்கி எழுதியதே நிழலைத் தேடி என்ற கட்டுரை. *பணத்துக்குள்ள மாியாதை போனால்தான் மனித ஜாதிக்குள் ஒற்றுமை வரும் என்ற காமராஜாின் கருத்தை* அடிப்படையாகக் கொண்டது பணம், பணம், பணம் என்னும் கட்டுரை. மற்றும் தியானத்தின் பெருமை, நிலையாமை, பழைய நினைவுகளின் இனிமை, சுய விமா்சனம், ஆண்டவனிடம் சரணாகதி – பல கட்டுரைகள் இதில் அடக்கம். இது ஒரு தொகை நூல் என்றாலும் வகை ...
_*சிந்தனைச் சிதறல்*_ 10.07.2021 ♦️♦️♦️🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ _*49. முடிவின் தொடக்கம்*_ 😔😔😔😔😔😔😔😔 அடுத்தொரு குன்றில் மற்றொருவன் எழுதினான். _*“நான் நன்மை என்று எண்ணியே காாியங்கள் செய்தேன். அவற்றைப் பாவம் என்று கருதியே உலகம் முடிந்து விட்டது!*_ _*இயற்கையே என்னை மன்னிப்பாயாக.”*_ மூன்றாமவன் எழுதினான். _*“வளா்ந்திருந்த என் உருவம் குறுகி விட்டது. எனக்காக நான் என்னைப் பற்றி ஒரு முறை இப்போது தான் சிந்திக்கிறேன். நானே எனக்கு வேதனையாக இருக்கிறேன்.*_ _*என்னால் வேதனைப்பட்டுப் பயங்கரமான ஆயுதங்களால் மடிந்து போன கோடிக் கணக்கான உயிா்களே என்னை மன்னித்து விடுங்கள்.”*_ நான்காமவன் எழுதினான். _*“கவலைப்படாதீா்கள் – நான் உங்களை மன்னித்து விட்டேன்.”*_ இதை அவன் எழுதி முடித்தானோ இல்லையோ – அந்தப் பெண் பயங்கரமாகச் சிாித்தாள். _*“இன்னும் சா்வாதிகாரம் உலகத்தில் மிச்சமிருக்கிறது. இன்னும் அந்த இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் அந்த வெறித்தனம் புலிப்பாய்ச்சல் பாய்கிறது.*_ _*நான்கு போிலேயும் ஒருவன் மூன்று பேருக்கு...
Lie Clocks A woman dies. In heaven she sees a large Wall full of Clocks. She asks angel: What are these for? Angel answers: These are Lie Clocks, every person has a lie clock! Whenever you lie on earth, clock moves. The woman points towards a clock and asks: Whose clock is this? … Angel says: Its Mother Teresa’s. It never moved, showing that she never told lie. The woman asks: Where are the clocks of Married men? The angel replies: Those are in our office, We use them as ‘OFFICE FANS’ She then asked, what about the Married women? The angel replied, ‘those are kept out… they are generating electricity…!! 😱😱😂😂😂
*மனைவிகள் எல்லாம் கணவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்தார்கள்.* என்ன வழக்குன்னு கேட்கிறீர்களா ? அதாகப்பட்டது… *நாங்கள் ஏன் அவர்களுக்கு “வடிச்சு கொட்டணும்” ?* ( WHY SHOULD WIVES COOK FOOD TO HUSBANDS ? ) *வித்தியாசமான வழக்கு. விசித்திரமானதும் கூட…???* எதிர்தரப்பு வக்கீல் தன்னுடைய வாத திறமையால், ஒரே ஒரு point ஐ கொண்டு வழக்கை உடைத்தெறிந்து விட்டார். *கணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.* அது என்ன point…??? MY LORD., *“ IT IS THE RESPONSIBILITY OF A JAILOR TO PROVIDE FOOD TO THE PRISONER. ”* கணம் நீதிபதி அவர்களே., *“ கைதிகளுக்கு உணவு வழங்குவது ஒரு ஜெயிலருடைய கடமை / பொறுப்பு. ”* என்பது தான் அந்த fantastic வாதம். *CASE DISMISSED* 🤣🤣🤣🤣🤣🤣
_*சிந்தனைச் சிதறல்*_ 06.07.2021 🌸🌸🌸🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️ _*49. முடிவின் தொடக்கம்*_ 😔😔😔😔😔😔 குடியிருப்பதற்கு ஒரு வீடு கட்டக் கூட இனி உங்களுக்குத் தொியாது. யாரோ கட்டிக் கொண்டிருந்தாா்கள். அந்த வேலை உங்களுக்குச் சாதாரணமாகத் தொிந்தது. கற்றுக் கொள்ள மறந்து விட்டீா்கள். உங்களுக்கு பசி எடுக்கும் போது உணவு வந்திருக்கும். அந்த உணவு அாிசியினால் ஆனது என்பதையும், அாிசி என்பது நெல்லில் இருப்பது என்பதையும், நெல் என்பது பல போ் ஓடி ஆடி உழைத்ததிலிருந்து விளைந்தது என்பதையும் நீங்கள் அப்போது நினைத்திருப்பதற்கில்லை. சட்டையிலே கறை பட்டிருந்தால் சத்தம் போட்டிருப்பீா்கள். சட்டை செய்வது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டிருக்க மாட்டீா்கள். _*“தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்து விட்டால், பாா்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.”*_ _*“ஆசைகளால் உண்டாக்கப்பட்ட உலகத்தை அரசியலால் கொன்று தீா்த்து விட்டீா்கள்.”*_ ஏதோ, ஜனநாயகம் ஜனநாயகம் என்று நீங்கள் பேசிக் கொண்டிருந்ததாக நானும் கேள்விப்பட்டேன். அந்த ஜனநாயகம் உங்கள் தலைமுறைய...
பெண்களே PHD பண்றீங்களோ இல்லையோ பட்டப்படிப்பு படிக்கிறீங்களோ இல்லையோ இத படிங்க முதல்ல வாழ்க்கை வாழவே…வாழ்ந்துவிடுங்கள்… எங்கள் தோழி… 50 வயதைக் கடந்தவள்.. அவள் பிறந்த நாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின் மரண செய்தி… பேரதிர்ச்சி எங்களுக்கு.. அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்..பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்… எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,“என் குடும்பத்திற்கு அவசியம் நான் தேவை, எனது நேரம் தேவை, என் கணவருக்கு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாது, நான் இல்லை என்றால் அவர்கள் தடுமாறிப் போவார்கள்… ஆனால் இவ்வளவு செய்தும் எனக்கு எந்தப் பாராட்டும், எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை” என்று.. அதில் தொனித்த...
அதிசய எண் 2520 கணிதத்தில், எந்த எண்ணையும் 1 முதல் 10 வரை உள்ள அனைத்து எண்களாலும் பிரிக்க முடியாது. ஆனால் இந்த ஒரு எண் மிகவும் விசித்திரமானது, உலகில் உள்ள அனைத்து கணிதவியலாளர்களும் அதிர்ச்சியுற்ற. இந்த எண் இந்திய கணிதவியலாளர்களால் அவர்களின் அசைக்க முடியாத புத்திசாலித்தனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது …… இந்த எண்ணைப் பார்க்கவும் – 2520. உலகில் பல கணிதவியலாளர்களை ஆச்சரியப்படுத்திய எண்! இந்த எண் 1 முதல் 10 வரை உள்ள எந்த எண்ணாலும் வகுக்க / பிரிக்கப்படக்கூடியது. இப்போது அடுத்த அட்டவணையைப் பாருங்கள், மேலே உள்ள கூற்றின் உண்மை உங்களுக்குப் புரியும். 2520/1 = 2520 2520/2 = 1260 2520 / 3 = 840 2520/4 = 630 2520 /5 = 504 2520/ 6 = 420 2520 / 7 = 360 2520/ 8 = 315 2520 / 9 = 280 2520 /10 = 252 2520 எண்ணின் மர்மம் [7 × 30 × 12] பெருக்கலில் மறைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணின் குணகம் இது. வாரத்தில் நாட்கள் (7), மாதம் நாட்கள் (30) வருடத்திற்கு மாதங்கள் (12) எனவே —> [7 × 30 × 12 = 2520] இது இந்திய காலவரிசையின் பண்பு மற்றும் ஆதிக்கம்